கண்டிடா உணவுக்குழாய் அழற்சி | |
---|---|
தீவிரமான கண்டிடா உணவுக்குழாய் அழற்சியைக் காட்டும் அகநோக்கிப் படம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases |
ஐ.சி.டி.-9 | 112.84 |
கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) என்பது கண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans) என்னும் பூஞ்சையால் (ஒரு வகை மதுவம்) ஏற்படும் தருணத் தொற்று ஆகும். எய்ட்ஸ் உட்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரில் இந்நோய் ஏற்படுகின்றது, பூஞ்சை முக்கியகூறாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பியை[1] நீண்டகாலமாகப் பயன்படுத்துவோருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
கண்டிடா உணவுக்குழாய் அழற்சி உடையவருக்கு மார்பெலும்பின் பிற்பகுதியில் விழுங்கும்போது வலி (விழுங்கல்வலி) ஏற்படுகின்றது.[1] நீண்டகால கண்டிடா அழற்சியால் எடை குறைவடையும். இத்தகைய நோய் உடையோரில் நாக்கில் அல்லது வாயின் பக்கத்தில் உள்ள சீதமென்சவ்வில் வெண்படலம் உண்டாகும், இது 'கண்டிடா வாய்வெண்படலம்' (oral thrush) எனப்படும்; இதை வழித்தெடுத்தால் அகன்றுவிடும், ஆனால் அவ்விடத்தில் குருதிக்கசிவு ஏற்படும், இத்தகைய வெண்படலம் கண்டிடாவினால் ஏற்படும் ஏனைய நோய்களிலும் காணப்படலாம்.
உணவுக்குழாய் இரையக அகநோக்கி மூலம் கண்டிடா அல்பிக்கன்சு பூஞ்சையால் ஏற்படும் வெண்மையான படிவுகளை அல்லது படலங்களை நோக்கலாம், இவை இலகுவில் அகற்றப்படக்கூடியனவாக இருக்கும், அகநோக்கி உயிரகச்செதுக்கு மூலம் படலத்தின் சிறு பகுதி அகற்றப்பட்டு, பின்னர், ஆய்வுகூடத்தில் கண்டிடா பூஞ்சை இனம் நுணுக்குக்காட்டி மூலம் அறியப்படும்.
கண்டிடாவுக்கு முதல்நிலைச் சிகிச்சையாக 750 மில்லிகிராம் ஃபுளுக்கொனசோல் (fluconazole) மாத்திரை ஒருவேளைக்கு மட்டும் கொடுக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் பரந்துபட்டுள்ளது,[2] எனினும் 14 நாட்கள் 150 மில்லிகிராம் பயன்படுத்தும் வழமையான முறையும் உண்டு. வேறு மாத்திரைகள்:
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)