கண்ணன் தேவன் மலை Kannan Devan Hill | |
---|---|
village | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
ஏற்றம் | 1,700 m (5,600 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 68,205 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
கண்ணன் தேவன் மலைக் குன்று என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தில், இடுக்கி மாவட்டம், தேவிக் குளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்.[1] இந்த கிராமம் மலைத் தோட்டப் பயிரான காப்பி பயிரிடுவதற்காக 1877 ஆம் ஆண்டு ஜீலை 11 ல் பூண்ஜாா் தம்புரான் என்பவரால், லண்டனைச் சோ்ந்த ஜான் டேனியஸ் முன்ரோ என்பவருக்கு குத்தகை விடப்பட்டது. பின்பு 1971 ஆம் ஆண்டு கண்ணன் தேவன் மலைக் குன்றுகள் (நிலம் புதுப்பொறுப்பேற்றல்) சட்டத்தின் கீழ் இக்கிராமத்தின் நிலங்களும், மலைத் தோட்டப் பயிர்களும் கேரள அரசால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டது. [2]
இன்று இது ஒரு புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[3]
இங்கு உள்ள கடுமையான வேலை சூழ்நிலை காரணமாக 2015 இல் பெண் தொழிலாளா்களால் நடத்தப்பெற்ற மூன்று மலைத் தோட்டப் பயிா் வேலை நிறுத்தம், கண்ணன் தேவன் மலைப் பகுதிைய சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மலைத்தோட்ட தொழிலாளா்களின் வேலைச் செய்யும் சூழ்நிலையை மேம்படுத்த காரணமாக, தூண்டுதலாக அமைந்தது.
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கண்ணன் தேவன் மலையின் மக்கள் தொகை 68,205. இதில் 34,473 ஆண்கள் 33,732 பெண்கள் அடங்கியுள்ளனா்.
{{cite web}}
: |first=
missing |last=
(help)CS1 maint: multiple names: authors list (link)