கனககிரி
Kanakagiri சுவர்ணகிரி | |
---|---|
கொப்பள் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 15°33′N 76°24′E / 15.550°N 76.400°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கொப்பள் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,098 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | கன்னடம்,ஆங்கிலம், இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 583283 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA 37 |
அருகாமை நகரம் | கங்காவதி |
மக்களவை (இந்தியா) தொகுதி | கொப்பள் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கனககிரி |
இணையதளம் | www |
கனககிரி (Kanakagiri) இந்திய வரலாற்று தளமான கனகச்சலபதி கோயில் அமைந்துள்ள ஊராகும். இதை சுவர்ணகிரி என்ற பெயராலும் அழைப்பார்கள்.
கர்நாடக மாநிலத்தின் கங்காவதி நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள கொப்பள் மாவட்டத்தில் கனககிரி அமைந்துள்ளது.[1]
கனகச்சலபதி கோயில் கனகிரியின் நாயக்கர்களால் கட்டப்பட்டது.[2] கோயிலின் அரங்குகள் மற்றும் தூண்கள் விசயநகர காலத்திலிருந்து வந்த தென்னிந்திய கட்டிடக்கலைக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டுகளாகும். இங்குள்ள கோபுரங்கள் மற்றும் சுவர்கள் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு மெருகூட்டப்பட்ட கல், அரைச்சாந்து மாதிரிகளில் ராசா மற்றும் ராணி சிலைகளும் புராணகால உருவங்களின் மரச் சிலைகளும் இந்த அலங்காரத்தில் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள கனககிரி சமண தீர்த்தம் என்பது 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் மேற்கு கங்கை வம்சத்தால் கட்டப்பட்ட சமண கோவிலின் ஒரு வளாகமாகும். வெங்கடப்ப நாயக் கட்டிய அரசர்களில் குளியல் குளம் கனகிரியின் புறநகரில் கட்டப்பட்டுள்ளது.
கனககிரியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஏமகுத்தா கோட்டை கந்துகலி குமார ராமாவின் கம்மடதுர்கா கோட்டைக்கு அடுத்ததாக உள்ளது.[3] இந்த கோட்டை 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட்தாகும். இந்த கோட்டையில் தசரா கொண்டாடும் துர்கா தேவியின் கோயில் உள்ளது.
கோயிலுடன் தொடர்புடைய கனககிரி உற்சவம் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் இங்கு நடைபெறுகிறது.