கனடாவில் இந்து சமயம்

கனடிய இந்துக்கள்
Canadian Hindus
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்து கனடியர்களின் பரம்பல்
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை
Increase 828,195 (2021)[1]
Increase கனடிய மக்கள்தொகையில் 2.3%
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்
ஒண்டாரியோ573,700
பிரித்தானிய கொலம்பியா81,320
ஆல்பர்ட்டா78,520
கியூபெக்47,390
மனிட்டோபா18,355
மொழிகள்
அதிகாரபூர்வம்
  • கனடிய ஆங்கிலம்
  • கனடிய பிரெஞ்சு

வீட்டுமொழி

புனித மொழி


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

கனடாவில் இந்து சமயம் ஒரு மூன்றாவது பெரிய சமயம் ஆகும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 2.3% பேர் இந்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[2][3] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, 828,000 க்கும் அதிகமான கனேடியர்கள் இந்து சமய நம்பிக்கையில் உள்ளனர்.[3]

கனடிய இந்துக்கள் பொதுவாக மூன்று குழுக்களில் ஒன்றிலிருந்து வந்தவர்கள். முதல் குழு முதன்மையாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பிரித்தானிய கொலம்பியாவிற்கு வரத் தொடங்கிய இந்தியக் குடியேற்றக்காரர்களால் ஆனது.[4] இந்தியா முழுவதிலும் இருந்து இந்துக்கள் இன்றும் கனடாவில் குடியேறுவது தொடர்கிறது. கனடாவிற்கு வந்த இந்துக் குடியேற்றவாசிகளின் முதல் அலையானது, வரலாற்று ரீதியாக ஐரோப்பியக் குடியேற்ற ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளான பிஜி, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா, கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சுரிநாம், கிழக்கு ஆபிரிக்கா வின் கடலோரப் பகுதிகளிலிருந்து வந்தது.[5] இந்துக்களின் இரண்டாவது பெரிய குழு வங்காளதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து குடியேறினர். இலங்கை இந்துக்களைப் பொறுத்தமட்டில், கனடாவில் அவர்களது வரலாறு 1940களில் சில நூறு இலங்கைத் தமிழர்கள் கனடாவுக்குக் குடிபெயர்ந்த காலத்திலிருந்து செல்கிறது.[6] இலங்கையில் 1983 இனக்கலவரம், அதன் பின்னர் நடந்த உள்நாட்டுப் போர் ஆகியவை காராணமாக கனடா, ஐக்கிய இராச்சியம், ஆத்திரேலியா, அமெரிக்கா, பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் 500,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். அப்போதிருந்து, இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக தொராண்டோ, தொராண்டோ பெரும்பாகம் பகுதியைச் சுற்றி கனடாவில் குடியேறினார்கள். மூன்றாவது குழுவானது ஐரோப்பியக் கனேடியர்களால் ஆனது, இவர்கள் இந்து வேதங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கண்டறிந்தனர், இந்து சமயத்தின் கொள்கைகளுக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினர். இந்த பிரிவுகளில் ஒன்று அரே கிருஷ்ணா இயக்கம்.[7] இசுக்கார்பரோவின் தொராண்டோ மாவட்டத்தில் குறிப்பாக இந்துக்களின் செறிவு அதிகமாக உள்ளது, பல சுற்றுப்புறங்களில் இந்து சமயம் மேலாதிக்க சமயமாக உள்ளது.[8]

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 828,195 இந்துக்கள் உள்ளனர், இது 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 297,200 ஆக இருந்தது.[9][10]

இந்து மக்கள் தொகை

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1961 460—    
1971 9,790+2028.3%
1981 69,505+610.0%
1991 1,57,015+125.9%
2001 2,97,200+89.3%
2011 4,97,200+67.3%
20218,28,195+66.6%
1961, 1971 தரவுகள் துல்லியமானைவை அல்ல, குடியேற்ற தரவுகளின் அடிப்படையில், உண்மையான புள்ளிவிவரங்கள் கணிசமாக அதிகமாக உள்ளன.[11][12]
ஆண்டு விழுக்காடு, % மக்கள்தொகை விழுக்காட்டில்
அதிகரிப்பு
விழுக்காட்டில்
அதிகரிப்பு
1971 0.05% -
1981 0.28% +0.23% 460%
1991 0.56% +0.28% 100%
2001 0.96% +0.40% 92%
2011 1.45% +0.49% 51%
2021 2.23% +0.78% 53%

மாகாணங்கள் வாரியாக

[தொகு]

தேசிய குடும்ப ஆய்வின்படி, கனடாவின் இந்து மக்கள்தொகை.[9]

மாகாணம் 2001 கணக்கெடுப்பு 2011 கணக்கெடுப்பு 2021 கணக்கெடுப்பு
இந்துக்களின் தொகை இந்துக்களின் % இந்துக்களின் தொகை இந்துக்களின் % இந்துக்களின் தொகை இந்துக்களின் %
ஒண்டாரியோ 217,560 1.9% 366,720 2.9% 573,700 4.1%
பிரித்தானிய கொலம்பியா 31,495 0.8% 45,795 1.0% 81,320 1.7%
ஆல்பர்ட்டா 15,965 0.5% 36,845 1.0% 78,520 1.9%
கியூபெக் 24,525 0.3% 33,540 0.4% 47,390 0.6%
மனிட்டோபா 3,835 0.3% 7,720 0.6% 18,355 1.4%
சஸ்காச்சுவான் 1,590 0.2% 3,570 0.3% 14,150 1.3%
நோவா ஸ்கோசியா 1,235 0.1% 1,850 0.2% 8,460 0.9%
நியூ பிரன்சுவிக் 470 0.1% 820 0.1% 3,340 0.4%
நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் 400 0.1% 635 0.1% 1200 0.2%
இளவரசர் எட்வர்ட் தீவு 30 0.0% 205 0.1% 1,245 0.8%
யூக்கான் 10 0.0% 165 0.5% 265 0.5%
வடமேற்கு நிலப்பகுதிகள் 60 0.2% 70 0.2% 200 0.5%
நூனவுட் 10 0.0% 30 0.1% 55 0.2%
கனடா 297,200 1.0% 497,200 1.5% 828,400 2.3%

இந்து சமூகம் மீதான தாக்குதல்

[தொகு]
  • 2013 ஆம் ஆண்டு சர்ரேயில் உள்ள ஒரு இந்து கோவிலின் மூன்று ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு அங்கு கண்டெடுக்கப்பட்ட பேஸ்பால் மட்டையில் சீக்கிய அடையாளங்கள் இருந்தன.[13]
  • 2018 ஆம் ஆண்டில், மாண்ட்ரீலை தளமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனமான “ஆர்ட் ஆஃப் வேர்” இந்துக் கடவுளான கணேஷின் உருவங்களைச் சுமந்து யோகா கேப்ரிகளை விளம்பரப்படுத்தியது. யுனிவர்சல் சொசைட்டி ஆஃப் ஹிந்துயிசத்தின் தலைவரான ராஜன் செட் , இது இந்துக்களை புண்படுத்தும் வகையில் மிகவும் பொருத்தமற்றது என்று கூறினார். "ஆர்ட் ஆஃப் வேர்" முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Religion by visible minority and generation status: Canada, provinces and territories, census metropolitan areas and census agglomerations with parts". 26 October 2022.
  2. "Ethnocultural and religious diversity – 2021 Census promotional material". 21 October 2022.
  3. 3.0 3.1 "Population of Christians, Hindus, Muslims and Non-Religious in Canada According to 2021 Census". To Do Canada. பார்க்கப்பட்ட நாள் 27 October 2022.
  4. "Indo-Canadians in 1920s and 1930s" (PDF). AHSNB Project. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  5. Wood, John R. (1978). "East Indians and Canada's New Immigration Policy". Canadian Public Policy 4 (4): 547–567. doi:10.2307/3549977. பன்னாட்டுத் தர தொடர் எண்:0317-0861. https://www.jstor.org/stable/3549977. 
  6. Adler, Mike (2019-12-24). "Opinion | For some Tamil-Canadians in Scarborough, Sri Lanka's war isn't over". Toronto.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  7. "Hare Krishna abandoned street chanting in robes years ago". torontosun. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  8. "Hare Krishna: The Rise in Krishna Consciousness". HuffPost Canada. 2011-09-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  9. 9.0 9.1 "2011 National Household Survey". www12.statcan.gc.ca. Statistics Canada. 8 May 2013. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  10. Government of Canada, Statistics Canada (2022-02-09). "Profile table, Census Profile, 2021 Census of Population - Canada [Country]". www12.statcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
  11. Government of Canada, Statistics Canada. "Topic-based tabulation: Selected Demographic and Cultural Characteristics (104), Selected Religions (35A), Age Groups (6) and Sex (3) for Population, for Canada, Provinces, Territories and Census Metropolitan Areas, 2001 Census". www12.statcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 2022-11-13.
  12. Government of Canada, Statistics Canada (2013-05-08). "2011 National Household Survey: Data tables – Religion (108), Immigrant Status and Period of Immigration (11), Age Groups (10) and Sex (3) for the Population in Private Households of Canada, Provinces, Territories, Census Metropolitan Areas and Census Agglomerations, 2011 National Household Survey". www12.statcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  13. "Surrey Hindu temple vandals caught on camera". cbc.ca. 24 June 2013. http://www.cbc.ca/news/canada/british-columbia/surrey-hindu-temple-vandals-caught-on-camera-1.1385319. 
  14. "Home » YesPunjab.com". YesPunjab.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.

வெளி இணைப்புகள்

[தொகு]