கனடிய கணித ஆய்விதழ் (Canadian Journal of Mathematics, பிரெஞ்சு மொழி: Journal canadien de mathématiques; அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0008-414X, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1496-4279) இருமாதங்களுக்கு ஒரு முறை கனேடிய கணித சமூகம் மூலம் வெளியிடப்படும் ஒரு கணித ஆய்விதழ் ஆகும்.[1]
இது 1949-ஆம் ஆண்டு எச். எசு. எம். கோசீட்டர் மற்றும் ஜி. டெ. பி ராபின்சன் ஆகியோரால் நிறுவப்பட்டது.[2] கனடிய கணித ஆய்விதழ் கணிதத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்டுரைகளை வெளியிடுகிறது.