கமலேசு பசுவான்

கமலேசு பசுவான்
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இந்திய அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
11 சூன் 2024
இணை அமைச்சராக சந்திர சேகர் பெம்மாசானி
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்சிவராஜ் சிங் சௌகான்
முன்னையவர்பக்கன் சிங் குலாஸ்தே
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2009
முன்னையவர்மகாவீர் பிரசாத்
தொகுதிபானசுகான்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஆகத்து 1976 (1976-08-06) (அகவை 48)[1]
கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2009 முதல்), சமாஜ்வாதி கட்சி (2009 வரை).[1]
துணைவர்ரீட்டு
பிள்ளைகள்3 ஜெய், ரக்சா, தானு
பெற்றோர்ஓம் பிரகாசு பசுவான்(தந்தை),
சுபாவதி பசுவான் (தாய்)
வாழிடம்கோரக்பூர் & புது தில்லி[1]
முன்னாள் கல்லூரிதுயா பவுல் பள்ளி, கோரக்பூர்.[1]
தொழில்தொழிலதிபர் &
அரசியல்வாதி[1]
செயற்குழுஉறுப்பினர், சமூக நீதி மேம்பாட்டுக் குழு

கமலேசு பசுவான் (Kamlesh Paswan) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 18ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் உள்ளார். பசுவான் உத்தரப் பிரதேசத்தின் பானசுகான் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.

இளமை

[தொகு]

கமலேசு பசுவான் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பாசி சமூகத்தில் பிறந்தார். இவர் கோரக்பூரில் உள்ள தூய பால் பள்ளியில் கல்வி கற்றுள்ளார். இவரது தந்தை ஓம் பிரகாசு பஸ்வானும் ஒரு அரசியல்வாதி. இவர் 1996-இல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது கொல்லப்பட்டார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக மணிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பஸ்வான் இருந்துள்ளார். 2009-இல், இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டார். பானசுகான் மக்களவைத் தொகுதியிலிருந்து 15வது மக்களவை உறுப்பினரானார். இவர் 16ஆவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ்வான் கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராகப் பதவியேற்றார்.

உயிருக்கு அச்சுறுத்தல்

[தொகு]

அக்டோபர் 2013-இல், இப்பகுதியில் உள்ள "அரசியல் எதிரிகள் மற்றும் மாபியாவிடமிருந்து" தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பசுவான் கூறினார். தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் இவர் கோரியதாகக் கூறப்படுகிறது. தனது பாதுகாப்புக் கவலைகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேசு யாதவிடம் புகார் தெரிவிப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் பசுவான் கூறினார்[2]

வகித்தப் பதவிகள்

[தொகு]
# முதல் வரை பதவி
01 2002 2007 உறுப்பினர் உத்தரப்பிரதேச சட்டமன்றம்
02 2009 2014 உறுப்பினர், 15வது மக்களவை
03 2009 2014 உறுப்பினர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழு
04 2014 2019 உறுப்பினர், 16வது மக்களவை
05 2019 2024 உறுப்பினர், 17வது மக்களவை
06 2024[3] பதவியில் உறுப்பினர், 18வது மக்களவை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]