கமல்நயன் பஜாஜ்

கமல்நயன் பஜாஜ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957-1971
தொகுதிவர்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-01-23)23 சனவரி 1915
இறப்பு1 மே 1972(1972-05-01) (அகவை 57)
பிள்ளைகள்ராகுல் பஜாஜ்
பெற்றோர்ஜம்னாலால் பஜாஜ்
ஜானகி தேவி பஜாஜ்

கமல்நயன் பஜாஜ் (Kamalnayan Bajaj) (1915-1972) இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமாவார்.

சுயசரிதை

[தொகு]

இவர் ஜம்னாலால் பஜாஜின் மூத்த மகனாவார். [1] இவர் 1915 சனவரி 23 அன்று பிறந்தார். [2] இவர் பஜாஜ் குழுமத்தை 1954 இல் தனது மாமாவிடமிருந்து பெற்ற பிறகு அதை பலப்படுத்தினார். [3] இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்தார்.

வணிக வாழ்க்கை

[தொகு]

இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் பஜாஜ் குழுமத்தின் நலன்களை இவர் பன்முகப்படுத்தினார்; முச்சக்கர வண்டிகள்; மற்றும் சீமைக்காரை, அலாய் வார்ப்பு மற்றும் மின் உபகரணங்கள் போன்றவையும் தயாரிக்கப்பட்டது. [3]

இவருக்கு ராகுல் பஜாஜ், சுமன் ஜெயின் [4] மற்றும் சிசிர் பஜாஜ் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். [5] ராகுல் பஜாஜ் இவரது மூத்த மகனாவார். [6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1957-1971 வரை வர்தா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது நண்பர் மொரார்ஜி தேசாயுடன் 1969 இல் காங்கிரசில் (ஓ) சேர்ந்து 1971 தேர்தலில் நின்று தோற்றார். [7]

இறப்பு

[தொகு]

இவர் மே 1, 1972 இல் தனது 57 வயதில் இறந்தார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of Bajaj Electricals".
  2. "Kamalnayan Bajaj: A 'Gandhian' rebel". https://www.business-standard.com/article/companies/kamalnayan-bajaj-a-gandhian-rebel-115012300028_1.html. 
  3. 3.0 3.1 3.2 "Kamalnayan Jamnalal Bajaj Foundation". Archived from the original on 2020-02-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
  4. "HinduBusinessLine Updates".
  5. "India Rich List 2013".
  6. "Kamalnayan Bajaj: A 'Gandhian' rebel". https://www.business-standard.com/article/companies/kamalnayan-bajaj-a-gandhian-rebel-115012300028_1.html. 
  7. Bhandari, Bhupesh (23 January 2015). "Kamalnayan Bajaj: A 'Gandhian' rebel". Business Standard. https://www.business-standard.com/article/companies/kamalnayan-bajaj-a-gandhian-rebel-115012300028_1.html. பார்த்த நாள்: 29 November 2018.