கருமண்டபம் | |
---|---|
கருமண்டபம், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 96.15 m (315.45 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620001 |
தொலைபேசி குறியீடு | +91431xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திருச்சிராப்பள்ளி, பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தென்னூர், புத்தூர் |
மாநகராட்சி | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | திருச்சிராப்பள்ளி மேற்கு |
கருமண்டபம் (Karumandapam) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மக்கள் வசிப்பிட மற்றும் வணிகம் நிறைந்த ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கருமண்டபம் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில், (10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாவட்ட நூலகத்துறையும் இணைந்து உருவாக்கிய பகுதிநேர நூலகம் ஒன்று கருமண்டபத்தில் இயங்குகிறது.[2]
இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கருமண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது.
கருமண்டபத்தில் மின்சார தகன மையம் ஒன்று உள்ளது.[3]