கலாமண்டலம் ஹேமாவதி

கலாமண்டலம் ஹேமாவதி
பிறப்பு1948

கலாமண்டலம் ஹேமாவதி (Kalamandalam Kshemavathy) (பிறப்பு: 1948) கேரளவின் திருச்சூரைச் சேர்ந்த ஒரு மோகினியாட்டக் நடனக் கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற கேரள கலாமண்டலத்தின் முன்னாள் மாணவராவார். இவர் தனது பத்து வயதில் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். பயிற்சி முடிந்ததும், முத்துசாமி பிள்ளை மற்றும் சித்ரா விஸ்வேஸ்வரன்ஆகியோரின் கீழ் பரத நாட்டியத்திலும், வேம்பதி சின்ன சத்யத்தின் கீழ் குச்சிபுடியிலும் மேம்பட்ட பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் மோகினியாட்டம் மரபுக்குள் இருக்கத் தேர்வு செய்தார். [1]

இளமைப்பருவம்

[தொகு]

கலாமண்டலம் ஹேமாவதி 1948 ஆம் ஆண்டில் கலை, நாடகம் மற்றும் இசை நிறைந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது குழந்தை பருவத்திலேயே பல்வேறு நடன வடிவங்களையும் இசையையும் கற்றுக் கொண்டார். இவர், கொச்சுகுட்டன் ஆசான், ஹன்சா உள்ளிட்ட உள்ளூர் ஆசிரியர்களிடமிருந்து காளியமர்தனம் போன்ற சிறிய நடனப் பகுதிகளைக் கற்றுக்கொண்டார். இறுதியில், ஹேமாவதி தனது பதினொரு வயதில் திரிச்சூரில் உள்ள கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். அங்கு, நேர்காணலின் போது, மலையாளத்தின் சிறந்த கவிஞர் வல்லத்தோல் நாராயண மேனன் முன்பாக, இவர் காளியமர்தனம் நடனப் பகுதியை நிகழ்த்தினார். இவரது நடனம் அங்கீகரிக்கப்பட்டு கலாமண்டலத்தில் சேர்க்கப்பட்டார்.

கலாமண்டலத்தில் சேர்ந்த பிறகு, ஹேமாவதி கடுமையாக உழைத்தார், மோகினியாட்டம், பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி ஆகிய மூன்று நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். கலாமண்டலம் பாலசுப்பிரமணியத்திடம் கதகளி பயிற்சி பெற்றார். சென்னையில் பல்வேறு கட்டங்களில் பரதநாட்டியம், மோகினியாட்டம் மற்றும் குச்சிபுடி நடன நிகழ்ச்சிகளைச் செய்துள்ளார்.

மோகினியாட்டக் கலைஞர்

[தொகு]

புதுதில்லியில் நடைபெற்ற வல்லத்தோல் நாராயண மேனன் நூற்றாண்டு விழாவிற்காக, கலாமண்டலம் ஹேமாவதி தனது தனி மோகினியாட்டம் நடனத்தை நிகழ்த்தினார்.

70 களின் முற்பகுதியில் இவர் கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்வான ஒன்பதாவது காங்கிரஸ் மாநாட்டில் நடன நிகழ்வை நிகழ்த்தினார். மேலும், கேரள சாகித்ய அகாதமியின் அப்போதைய தலைவரும், மலையாள எழுத்தாளருமான பொங்குன்னம் வர்கி, கலாமண்டலம் க்ஷேமாவதிக்கு மோகினியாட்டத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக, ஹேமாவதி, மோகினியாட்டம் நடனக் கலைஞராக புகழ் பெறத் தொடங்கினார். [2]

விருதுகள்

[தொகு]

மோகினியாட்டத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2011 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [3] இவர் சங்கீத நாடக அகாதமி விருது, மற்றும் நிருத்ய நாட்டிய புராஸ்கரா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். 2019இல், கேரள மாநில அரசு, நாட்டியத்தில் இவரது 50 ஆண்டுகால பங்களிப்பை போற்றும் விதமாக 'நிஷாகந்தி விருதை' வழங்கியுள்ளது.

நடனப்பள்ளி

[தொகு]

ஹேமாவதி தனது அபிநயம் மற்றும் கலை வடிவத்திற்கான பாரம்பரியவாத அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர். [4] அவர் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறார் மற்றும் பரிசோதனை தவிர்க்க முடியாதது என்று நம்புகிறார், ஆனால் கலை வடிவத்தின் அடிப்படைகளை விட்டுவிட்டு ஆராய வேண்டும் என்பது இவரது கருத்தாக இருக்கிறது. இவரது நடனப் பள்ளி கடந்த காலங்களில் ஜெர்மனி, பிரான்ஸ், [5] சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச திறமைகளை ஈர்த்தது. இதனால் இவர், தொடர்ந்து கவனிக்கப்படுகிறார்.

இவர் நிறைய புதுமையான நடனங்களை செய்துள்ளார். செருசேரி மற்றும் சுகதகுமாரி, "குச்செலவிட்டம்", சிந்தவிஷ்டய சீதா, லீலா போன்ற பாரம்பரிய, மற்றும் கஜல்கள் உள்ளிட்ட சுமார் 100 பாடல்களுக்கு இவர் காட்சி பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளார். இவர் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஆசிரியர் ஆவார். [6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஹேமாவதி, நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குனராக விளங்கிய, மறைந்த வி.கே. பவித்திரனின் மனைவி ஆவார். இவருக்கு ஈவா பவித்ரன், லட்சுமி பவித்ரன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். [7]

குறிப்புகள்

[தொகு]
  1. Kaladharan, V. (4 February 2011). "In step with tradition". The Hindu. http://www.thehindu.com/arts/dance/in-step-with-tradition/article1152547.ece. பார்த்த நாள்: 18 January 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Sadasivan, T. K. (17 March 2011). "Lyrical moves". The Hindu. http://www.thehindu.com/arts/dance/article1546674.ece. பார்த்த நாள்: 18 January 2013. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Mohiniyattom wins a French heart". The Times of India. 22 April 2012 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216065935/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-22/thiruvananthapuram/31381843_1_dance-form-indian-dance-indian-culture. பார்த்த நாள்: 18 January 2013. 
  6. "Kalamandalam Kshemavathy". narthaki.com. பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.
  7. Santosh, K. (27 February 2006). "Filmmaker Pavithran dead". The Hindu இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024113916/http://www.hindu.com/2006/02/27/stories/2006022710850400.htm. பார்த்த நாள்: 18 January 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kalamandalam Kshemavathy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.