கல்விசார் மதிப்பீடு (Educational assessment) மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கும் அறிவு, திறன், மனப்பான்மை, திறமை மற்றும் நம்பிக்கைகள் பற்றிய அனுபவத் தரவுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் அதனை முறையாகப் பயன்படுத்தும் செயல்முறையாகும்.[1] மாணவர்களின் கற்றல் திறன்களை நேரடியாக மாணவர்களின் பணிகளை ஆய்வு செய்வதன் மூலம் மதிப்பீட்டுத் தரவைப் பெறலாம் அல்லது கற்றல் பற்றிய அனுமானங்களைச் செய்யக்கூடிய தரவுகளின் அடிப்படையில் அவர்களின் கற்றல் திறன்களை மதிப்பீடு செய்ய இயலும். [2] மதிப்பீடு, பெரும்பாலும் தேர்விற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்வோடு மட்டுப்படுத்தப்படுவதில்லை. [3] மதிப்பீடு என்பது கற்பவர், கற்றல் சமூகம் (வகுப்பு, பட்டறை அல்லது பிற ஒழுங்கமைக்கப்பட்ட கற்பவர்களின் குழு), பாடநெறி, கல்வித் திட்டம், நிறுவனம் அல்லது கல்வி முறை ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கல்விச் சூழலில் 'மதிப்பீடு' என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. [4]
மதிப்பீடு, ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக, மாணவர்களின் கற்றலை அளவிடக்கூடிய மற்றும் தெளிவான கற்றல் விளைவுகளை நிறுவுகிறது. கற்றல் விளைவுகளை அடைய போதுமான வாய்ப்புகளை வழங்குகிறது.[5] மதிப்பீடு என்பது கல்விச் செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகும், இது மாணவர்களின் சாதனைகளின் அளவை தீர்மானிக்கிறது. [6]
கல்வியில் மதிப்பீட்டு நடைமுறைகளின் இறுதி நோக்கம், பயிற்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தியல் கட்டமைப்பு, மனித மனத்தின் இயல்பு, அறிவின் தோற்றம் மற்றும் கற்றல் செயல்முறை பற்றிய அவர்களின் அனுமானங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தது.
மதிப்பீடு என்ற சொல் பொதுவாக மாணவர்கள் கற்க உதவுவதற்கும் மாணவர் முன்னேற்றத்தை அளவிடுவதற்கும் ஆசிரியர்கள் பொதுவாகப் பயன்படுத்துவதாகும்.[7] பின்வரும் வகைகளில் மதிப்பீட்டைப் பிரிக்கலாம்:
வேலை வாய்ப்பு, வளரறி, தொகுத்தறி மற்றும் கண்டறியும் மதிப்பீடு
↑Nelson, Robert; Dawson, Phillip (2014). "A contribution to the history of assessment: how a conversation simulator redeems Socratic method". Assessment & Evaluation in Higher Education39 (2): 195–204. doi:10.1080/02602938.2013.798394.