களுகங்கை | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | களுத்துறை |
⁃ உயர ஏற்றம் | கடல் மட்டம் |
நீளம் | 129 கி.மீ. |
களுகங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாதமலையில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 10வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 2வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2688 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 4வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1]
களு ஆற்றின் முக்கிய கிளையாறுகளில் ஒன்றான குகுலே ஆற்றில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நீர் மின்த்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யுனெஸ்கோ உலக பொக்கிச இடமான சிங்கராஜ மழைக்காட்டின் எல்லையில் கலவானை நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 400 மொகா வாட் வலுவிலான மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.[2]
1968 ஆன் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றால் முன்மொழியப்பட்ட களு ஆற்றின் நீரை அம்பாந்தோட்டக்கு, அம்பாறை, மொனராகாலை பகுதிகளுக்கு திசைத்திருப்புவதற்கான முன் மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.இந்த முன்மொழிவுகளை திருத்திய வடிவில் முன்னெடுப்பதற்கு சனாதிபதி மகிந்த ராஜபக்ச முனைகிறார்.[3]
களு ஆறு இலங்கையின் வெள்ளப்பெருக்குகள் கூடிய ஆறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இரத்தினபுரி நகரம் வெள்ளப்பெருக்கு ஆபாயத்தை எதிர் கொண்டவண்ணம் உள்ளது. 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 60 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய வெள்ளப்பெருக்காகும். இதன் போது ஆக குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டும், 175,000 பேர் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.[4]