காக்கிநாடா காஜா | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | காக்கிநாடா, ஆந்திரப்பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | கோதுமை மாவு, சர்க்கரை, நெய், |
வேறுபாடுகள் | கோட்டம் காஜா, மாதாதா காஜா |
காக்கிநாடா காஜா (Kakinada Kaaja)(தெலுங்கு : కాకినాడ కాజా) என்பது 1891ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா நகரத்திலிருந்து தோன்றிய இனிப்பு ஆகும்.[1]
ஆகத்து 2018 நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச அரசு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.[2]
குண்டூர் மாவட்டத்தில் தெனாலிக்கு அருகில் உள்ள சீனப்பரிமி கிராமத்தைச் சேர்ந்த சிட்டிபேடி கோட்டய்யா 1891ஆம் ஆண்டு காக்கிநாடாவுக்குக் குடிபெயர்ந்து இந்த இனிப்பைத் தயாரிக்கும் இனிப்புக் கடையைத் தொடங்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.[1]