காசுமோகுளோர்

காசுமோகுளோர்
Kosmochlor
குரோமைட்டு (உலோகக் கருப்பு), காசுமோகுளோர் பைராக்சீன் (மரகதப் பச்சை முதல் அடர் பச்சை வரை), குரோமியன் இஏடைட்டு பைராக்சீன் (பச்சை), குரோமிபெரசு ஆர்ஃப்வெட்சோனைட்டு ஆம்பிபோல் (பச்சை அல்லது சாம்பல்), சிம்ப்ளெக்டைட்டு (பச்சை, பெரும்பாலும் குரோமியன் இயேடின் மெல்லிய-படிக கனிம கலவை)
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaCr3+Si2O67
இனங்காணல்
நிறம்மாணிக்கப் பச்சை
படிக இயல்புபட்டகப் படிகங்கள் மற்ரும் இழை திரட்சிகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்எளிமை, {100} மற்றும் {001} இல் அடுக்கு
பிளப்புசரிபிளவு {110} இல் {001} இல் பிளவு
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்இளம்பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி3.51-3.60
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.766 nγ = 1.781
இரட்டை ஒளிவிலகல்δ = 0.015
பலதிசை வண்ணப்படிகமைX = மஞ்சள் கலந்த பச்சை; Y = நீலப்பச்சை, புல் பச்சை; Z = மாணிக்கப் பச்சை
நிறப்பிரிகைr > v
மேற்கோள்கள்[1][2][3]

காசுமோகுளோர் (Kosmochlor) என்பது NaCr3+Si2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும். குரோமியம் சோடியம் கிளினோபைராக்சீன் வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

விண்கற்களில் தோன்றியதற்காக செருமனியின் காசுமிசு என்ற சொல்லிலிருந்து , இதன் பச்சை நிறத்திற்காக கிரேக்க சொல்லான குளோர் என்ற பெயரிலிருந்தும் காசுமோகுளோர் என்ற பெயர் வந்தது. முதன்முதலில் மெக்சிகோ நாட்டின் இயிக்குபில்கோ நகராட்சியில் 1897 ஆம் ஆண்டு தோலுகா விண்கல்லில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது.[1]

சில இயேடிடைட்டு எனப்படும் உருமாறிய பாறைகளின் முக்கிய அங்கமாகவும் சில இரும்பு விண்கற்களின் துணைக் கனிமமாகவும் காசுமோகுளோர் தோன்றுகிறது. கிளிஃப்டோனைட்டு (கிராஃபைட்), குரோமியன் டயோப்சைட்டு, தோலுகாவில் உள்ள திரொலைட்டு; தௌப்ரீலைட்டு, கிரினோவைட்டு, உரோயிட்டெரைட்டு, இரிச்டெரைட்டு, குரோமைட்டு மற்றும் இயேடைட்டு, குளோரைட்டு (பர்மா) ஆகிய தனிமங்களுடன் சேர்ந்து காசுமோகுளோர் காணப்படுகிறது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் காசுமோகுளோர் கனிமத்தை Kos[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Kosmochlor on Mindat
  2. 2.0 2.1 Kosmochlor in the Handbook of Mineralogy
  3. Kosmochlor on Webmin
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.