காஜல் ஓசா வைத்யா | |
---|---|
குஜராத்தி இலக்கிய விழாவில் காஜல் ஓசா வைத்யா, 2014 | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1966 மும்பை, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் |
மொழி | குஜராத்தி |
குடியுரிமை | ![]() |
கல்வி நிலையம் | குஜராத் பல்கலைக்கழகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 2005- |
துணைவர் | சஞ்சய் வைத்யா |
பிள்ளைகள் | தத்தாகத் (மகன்) |
கையொப்பம் | |
![]() | |
இணையதளம் | |
kaajalozavaidya |
காஜல் ஓசா வைத்யா (Kaajal Oza Vaidya) இந்திய மாநிலமான குசராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், வானொலி ஆளுமையும், பத்திரிகையாளரும் ஆவார். இவர், ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையாளராகவும் நடிகையாகயாகவும் பணியாற்றினார். இவர் புதினங்கள், சிறுகதைகள் ,கட்டுரைகள் உட்பட 56க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கதைகள், உரையாடல்கள், நாடகத் தொடர்கள், திரைக்கதைகளை எழுதியுள்ளார். இவர் பல வெளியீடுகளில் பத்திகளை எழுதுகிறார். மேலும் ஒரு வானொலி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.[1]
காஜல், 29 செப்டம்பர் 1966 அன்று மும்பையில் பிறந்தார். 1986இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்திலும், சமசுகிருதத்திலும் பட்டம் பெற்றார். மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் விளம்பர முகாமைத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
2005இல் வெளிவந்தசம்பந்த் டு ஆகாஷ் என்ற சிறுகதை தொகுப்பு மூலம் எழுத்துக்கு அறிமுகமானர். அதைத் தொடர்ந்து ஷேஷத்ரா என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. இவரது யோக் வியோக், என்ற இவரது முதல் புதினம் சித்ரலேகா என்ற பத்திரிக்கையில் வாராந்திரத் தொடராக வந்தபோது இவரது புகழ் அதிகரித்தது. இவர் தனது முந்தைய வாழ்க்கையில் நாடகங்களிலும் பணியாற்றினார். குஜராத் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு தகவல் தொடர்புத் துறையில் மேம்பாட்டு தகவல் தொடர்பு துறையில் வருகை தரும் ஆசிரியராக இவர் படைப்பு எழுத்தை கற்பிக்கிறார்.
இவர், சந்தேஷ், குஜராத் டெய்லி, லோக்சட்டா-ஜன்சட்டா, இந்தியன் எக்சுபிரசு, அபியான், சமகாலின், சம்பாவ் ஆகியவற்றுடன் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். திவ்யா பாஸ்கர், குஜராத் மித்ரா, குச்சுமித்ரா, ஜன்மபூமி பிரவாசி, ;;கல்கத்தா ஹலாச்சல்;; போன்ற பத்திரிக்கைகளைல் பத்திகளை எழுதிக் கொண்டிருக்கிறார். இவர் தொடர்ந்து குஜராத் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறார். [2] [3] இவர் அகமதாபாத்தில் காஜல்@9 94.3 என்ற பண்பலை வானொலி நிகழ்ச்சியை நடத்துகிறார்.[4]
இவர் பல தயாரிப்புகளின் கதை, வசனம் மற்றும் உரையாடல்களை எழுதியுள்ளார். ஹம் தயாரிப்பு நிறுவனத்துக்காக சில நாடகங்களை எழுதினார். அந்தர்ணா உஜாஸ், சுக்னோ ஆர்த், ஹு ஜா பாக்யவிதாத்தா ஆகிய மூன்று குஜராத்தி தொலைக்காட்சிப் படஙகளின் கதை, திரைக்கதை மற்றும் உரையாடல்களை எழுதினார்;
இவர் பல தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கு கதைகளை எழுதினார். டிடி கிர்னாரில் ஒளிபரப்பப்பட்ட இவரது நாடகமான ஏக் டால்னா பங்கி (2001) 1600 அத்தியாயங்களை நிறைவு செய்தது. மோதி பா என்பது இடிவி குஜராத்தியில் 500 அத்தியாயங்களை ஒளிபரப்பியது. குஜராத்தியில் இவருடைய மற்ற வாராந்திர நாடகங்களான சாத் தாலி, ஏக் மோதி ஏக்லாவ்யனு, இந்தியில், பி 4 யூ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அப்னே பராயே, எஸ்ஏபி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மகாசதி சாவித்திரி ஆகியவற்றின் கதைகளை இவர் எழுதினார். குஜராத்தி திரைப்படங்களான திக்ரி டூ பார்கி தபன் கெஹ்வே, சப்தபதி (2013) ஆகியவற்றுக்கும், காட் , திவானாகி போன்ற இந்திப் படங்களுக்கும் திரைக்கதையை எழுதினார்.[5] [6]
இவரது யோக் வியோக் என்ற புதினம் செய பாதுரி பச்சன் நடிக்க வசுந்தரா[7] என்ற தொலைக்காட்சித் தொடராக தழுவி எடுக்கப்பட்டது.[8] [9] ஆனால் பின்னர் தயாரிப்பு தாமதமானது.[10]
திகந்த் ஓசாவின் மகளான இவர், அகமதாபாத்தில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞர் சஞ்சய் வைத்யாவை 22 சூன் 1993இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ததாகத் என்ற மகன் உள்ளார்.[11]
2015 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில் இவர் கௌரவிக்கப்பட்டார்.[12]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
==வெளி இணைப்புகள்