காட்சா சாந்தம்பறையன்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | |
இனம்: | கா. சாந்தம்பறையன்சிசு
|
இருசொற் பெயரீடு | |
காட்சா சாந்தம்பறையன்சிசு அருணாச்சலம் மற்றும் பலர், 2002 | |
வேறு பெயர்கள் | |
|
காட்சா சாந்தம்பரைன்சிசு (Ghatsa santhamparaiensis) எனும் சாந்தாம்பாறை அயிரை, காட்சா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[2] இது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் சிற்றினப் பெயர் இது காணப்படும் சாந்தாம்பாறையின் அடிப்படையில் இடப்பட்டுள்ளது. சாந்தம் பாறை அயிரை மீன் 6.1 செ. மீ. வரை வளரக்கூடியது. இது பாறைகளின் அடியில் மற்றும் பாறைகளின் விளிம்புகளின் கீழ் மறைந்து காணப்படும்.[3]
இடுக்கியில் காணப்படும், ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலிருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி கழிவுகளால் இவை இப்போது அழிவின் விளிம்பில் உள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் தரவுகளின் படி அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டது.