காய் பெகுரெண்டு Kai Behrend | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆம்பர்கு, செருமனி |
தேசியம் | செருமானியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆர்த்ர் ஓகுசு |
ஏனைய கற்கை ஆலோசகர்கள் | கூண்டர் ஆர்டர் |
அறியப்படுவது | பெகுரெண்டு சார்பு பெகுரெண்டு பகுப்பாய்வு சமன்பாடு நேர்த்தியான தடைக் கோட்பாடு |
விருதுகள் | காக்சிட்டர்–யேம்சு பரிசு, 2001 செப்ரி–வில்லியம்சு பரிசு, 2011 |
காய் பெகுரெண்டு (Kai Behrend) ஒரு செருமானியக் கணிதவியலாளர் ஆவார். இவர் கனடா, வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
இயற்கணித வடிவியலில் பணியாற்றும் இவர் இயற்கணித அடுக்குகள், குரோமோவ்-விட்டன் மாற்றங்கள், டொனால்ட்சன்-தாமசு கோட்பாடு (பெகெரெண்டு சார்பு) ஆகியவற்றில் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். பெகுரெண்டு சமன்பாடிற்காகவும் அறியப்படுகிறார். இது இயற்கணித அடுக்குகளின் கிரேக்கெண்டிக்-லெப்செட்சு பகுப்பாய்வு சமன்பாட்டின் பொதுமைப்படுத்தல் ஆகும். இவர் 2001 ஆண்டிற்கான காக்சிட்டர்-யேம்சு,[1] 2011 ல் ஜெஃப்பர்-வில்லியம்ஸ் பரிசும்,[2] 2015 இல் பிம்சு பரிசும் பெற்றாா்.[3]