கார்லி எம். பியட்டெர்சு Carle M. Pieters |
---|
 |
கல்வி | கணிதக்கல்வியில் இளங்கலை (1966); கோள் அறிவியலில் இளம் அறிவியல், மூதறிவியல், முனைவர் பட்டங்களை முறையே 1971, 1972, 1977 ஆம் ஆண்டுகளில் |
---|
படித்த கல்வி நிறுவனங்கள் | அந்தியோக் கல்லூரி, மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் |
---|
பணி | கோள் அறிவியலாளர் |
---|
பணியகம் | பிரவுன் பல்கலைக்கழகம் |
---|
கார்லி மெக்கெட்சின் பியட்டெர்சு (Carle McGetchin Pieters) (பிறப்பு:: 1943) குறிப்பிடத்தக்க ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் 150 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் Remote Geochemical Analyses: Elemental and Mineralogical Composition எனும் நூலை பீட்டர் எங்லெர்ட்டுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது பொதுவான ஆய்வு முயற்சிகள் கோள் தேட்டத்திலும் கோள் மேற்பரப்பின் படிமலர்ச்சியிலும் குறிப்பாக அதன் தொலைவுணர்வு முறைகாலால் ஆகிய உட்கூறுகளின் ஆய்விலும் அமைகிறது..[1]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]
- சிறுகோள் 3713 பியட்டெர்சு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- 2010 ஆம் ஆண்டின் ஜி. கே. கில்பெர்ட் விருது, அமெரிக்கப் புவியியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான மிக உயர்ந்த விருது[2]
- கியூப்பர் பரிசு, 2004, அமெரிக்க வானியல் கழகம் வழங்கும் கோள் அறிவியல் பிரிவுக்கான உயர்தகைமை விருது[3]
- அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர் , 2007[4]
- அமெரிக்கப் புவியியற்பிய்ல் ஒன்றியத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுறுப்பினர், 2001
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
மற்றவை | |
---|