கிரிஜாசங்கர் பக்வான்ஜி பதேக்கா | |
---|---|
![]() | |
பிறப்பு | சித்தல், பிரித்தானிய இந்தியா | 15 நவம்பர் 1885
இறப்பு | 23 சூன் 1939 பவநகர், குசராத்து, இந்தியா | (அகவை 53)
மற்ற பெயர்கள் | “மீசை உள்ள அம்மா” |
அறியப்படுவது | கல்வி, சீர்திருத்தம், சிறுவர் கல்வி |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா” எனவும் அறியப்படுகிறார். முதலில் இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, இவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.
பதேகா, மேற்கு இந்தியாவின் செளராஷ்டிரா பகுதியில் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் “ கிரிஜாசங்கர் “. குசராத்தில் உள்ள பவநகர் பகுதியில் வளர்ந்தார். 1907 –ல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு சென்ற இவர், பின் மும்பையில் தனது பணியை தொடர்ந்தார். 1939, ஜூன் 23-ல் இயற்கை எய்தினார்.
1920 –ல் பால மந்திர் மழலையர் பள்ளியை தொடங்கினார். பிறகு நானாபாய்பட், ஹர்பால் திரிவேதி மற்றும் பதேகா ஆகியோர் சேர்ந்து “ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஜிஜூபாய் வினய் மந்திர் “ என்னும் பள்ளியை பவநகரில் நிறுவினர்.
பதேகா கதைப்புத்தகங்கள் உட்பட 200 நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் குழந்தைக் கல்வி, பயணம், நகைச்சுவை இவைகளை மையப்படுத்தியே இருந்தன. அவருடைய புத்தகங்கள் குழந்தைகள், பெற்றோர், கல்வியாளர்களை பெரிதும் கவர்ந்தன.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)