கிமானிஸ் (P176) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kimanis (P176) Federal Constituency in Sabah | |
கிமானிஸ் மக்களவைத் தொகுதி (P176 Kimanis) | |
மாவட்டம் | பாப்பார் மாவட்டம் பியூபோர்ட் மாவட்டம் உட்பகுதி பிரிவு மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 40,763 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கிமானிஸ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பாப்பார் |
பரப்பளவு | 949 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது ஆலமின் (Mohamad Alamin) |
மக்கள் தொகை | 50,408 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கிமானிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kimanis; ஆங்கிலம்: Kimanis Federal Constituency; சீனம்: 金马尼士联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு மற்றும் மேற்கு கரை பிரிவு எனும் பிரிவுகளில்; பாப்பார் மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P176) ஆகும்.[5]
கிமானிஸ் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து கிமானிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பியூபோர்ட் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பியூபோர்ட் மாவட்டத்தின் தலைநகரம் பியூபோர்ட் நகரம். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது.
பியூபோர்ட் நகரம் கோத்தா கினபாலுவிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரின் மையத்தில் படாஸ் ஆறு (Padas River) பாய்கிறது. இந்தப் படாஸ் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளத்தைத் தவிர்ப்பதற்காக, பியூபோர்ட் நகரத்தில் உள்ள சாலைகளுக்கு மேல் உயரமாகக் கடைவீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
1890-ஆம் ஆண்டுகளில் சபாவில் உருவாக்கப்பட்ட நகரங்களில் பியூபோர்ட் நகரமும் ஒன்றாகும். சபாவில் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[7]
1898-ஆம் ஆண்டில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Chartered Company) நிர்வாக இயக்குநர் வில்லியம் சி. கோவி (William C. Cowie) என்பவரால் பியூபோர்ட் நகரம் நிறுவப்பட்டது.
கிமானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கிமானிஸ் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P111 | 1971–1973 | பெங்கீரான் தாகிர் பெத்ரா (Pengiran Tahir Petra) |
அசுனோ |
1973–1974 | பாரிசான் நேசனல் (அசுனோ) | |||
4-ஆவது மக்களவை | P125 | 1971–1977 | ||
1977–1978 | பெங்கீரான் அலியுதீன் தாகிர் (Pengiran Aliuddin Tahir) | |||
5-ஆவது மக்களவை | 1977–1981 | சுயேச்சை | ||
1981-1982 | பெங்கீரான் ஒசுமான் ரவுப் (Pengiran Othman Rauf) |
பாரிசான் நேசனல் (சபா மக்கள் முன்னணி) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P147 | 1986–1990 | நூர்னிக்மன் அப்துல்லா (Nurnikman Abdullah) |
பாரிசான் நேசனல் (அசுனோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | காகாசான் ராக்யாட் (ஐக்கிய சபா கட்சி) (PBS) | ||
பியூபோர்ட் மக்களவைத் தொகுதியில் இணைக்கப்பட்டது | ||||
பியூபோர்ட் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P176 | 2004–2008 | அனிபா அமான் (Anifah Aman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2019 | சுயேச்சை | |||
2020–2022 | முகமது ஆலமின் (Mohamad Alamin) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமது ஆலமின் (Mohamad Alamin) | பாரிசான் (BN) | 13,004 | 41.86 | 12.62 ▼ | |
தாவூத் யூசப் (Daud Yusof) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 9,967 | 32.08 | 13.44 ▼ | |
அகமட் முகமது யூசோப் (Amat Mohd Yusof) | மக்களாட்சி கட்சி (KDM) | 4,013 | 12.92 | 12.92 | |
ரவுன்டி லாரன்ஸ் (Rowindy Lawrance) | பாக்காத்தான் (PH) | 3,931 | 12.65 | 12.65 | |
யூசப் ஒசுமான் (Yusop Osman) | தாயக இயக்கம் (GTA) | 153 | 0.49 | 0.49 | |
மொத்தம் | 31,068 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 31,068 | 98.66 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 423 | 1.34 | |||
மொத்த வாக்குகள் | 31,491 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 40,763 | 76.22 | 3.70 ▼ | ||
Majority | 3,037 | 9.78 | 0.84 | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)