கிரிசன் தேவ் திவான் Krishan Dev Dewan | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | வைசாலி பகுதி விவசாயிகள் சங்கம் |
பிள்ளைகள் | எசு. கே. தவான், சுதீர் தவார், ஆசா சதுவுத்ரி, ராசீவ் திவான், வனிதா கபூர் |
விருதுகள் | பத்மசிறீ |
கிரிசன் தேவ் தேவன் (Krishan Dev Dewan) என்பவர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் வைசாலி பகுதி சிறு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஆவார். இது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள வைசாலியில் உள்ள விவசாயிகளின் நலனுக்கான ஒரு அரசு சாரா அமைப்பினைத் தோற்றுவித்தார்.[1] நிலோகேரியின் அகதி விவசாயிகளை சுயச்சார்புடையவர்களாக மாற்ற இவர் ஏற்பாடு செய்ததாக அறியப்படுகிறது.[2] வைசாலியில் இவரது செயல்பாடுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் பட்டியலிடப்பட்டு, வளர்ச்சியில் மக்கள் பங்கேற்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.[3] இந்திய அரசு இவருக்கு 1986-ல் நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]