கிரிப்டான் டெட்ராபுளோரைடு (Krypton tetrafluoride) என்பது KrF4 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். கிரிப்டான் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இன்னமும் கருதுகோள் நிலையிலேயே உள்ளது. ஒரு காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் இச்சேர்மத்தை உருவாக்கினர் என்றாலும் இக்கூற்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை.[1] கிரிப்டான் டெட்ராபுளோரைடை உருவாக்குவது கடினமானது. ஒரு வேளை அது உருவாக்கப்பட்டாலும் நிலைப்புத்தன்மை அற்றதாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[2] கோட்பாட்டு வேதியியல் பகுப்பாய்வுகள் KrF4 தோராயமாக சதுர தள மூலக்கூறு வடிவவியலைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றன.[2]
↑ 2.02.1Dixon, David A.; Wang, Tsang-Hsiu; Grant, Daniel J.; Peterson, Kirk A.; Christe, Karl O.; Schrobilgen, Gary J. (2007). "Heats of Formation of Krypton Fluorides and Stability Predictions for KrF4 and KrF6 from High Level Electronic Structure Calculations". Inorg. Chem.46 (23): 10016–10021. doi:10.1021/ic701313h.