கிரிராஜ் சிங், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பர்ஹியாவை சொந்த ஊராகக் கொண்டவர்.[1] இவர் 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நவாதா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று,பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவைக்கு உறுப்பினர் ஆனார். இவர் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ளார்.
இவர் 2014 நரேந்திர மோதியில் முதல் அமைச்சரவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் இணை அமைச்சராகவும், [2] மற்றும் 2019 நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளர்ப்பு அமைச்சகத்தில் காபினெட் அமைச்சராக உள்ளார். [3] [4]