கிருட்டிணன் மண்டபம் | |
---|---|
கிருட்டிணன் மண்டபத்தின் நுழைவு வாயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மாமல்லபுரம் |
புவியியல் ஆள்கூறுகள் | 12°37′00″N 80°11′30″E / 12.6167°N 80.1917°E |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
கிருட்டிணன் மண்டபம் (Mandapa of Krishna or Krishna Mandapam)[1] மாமல்லபுரத்தில் உள்ள மரபுச் சின்னங்களின் ஒன்றாகும். இந்த மண்டபம் இந்தியாவில், தமிழ்நாட்டில், வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.[2] மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதியாக விளங்கும் இந்தக் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில்ஒன்றாக 1984 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டது.[3]அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம் அமைந்துள்ள சிறு பாறைக்கு அடுத்ததாக உள்ள குன்றில் அமைந்துள்ளது.[4]
இது உண்மையில் திறந்த வெளியில் பாறையில் கிருட்டிணனுக்கு அர்ப்பணமாக ஏழாம் நுாற்றாண்டின் மத்தியில் அமைக்கப்பட்டு, பின்னர், 16 ஆம் நுாற்றாண்டில், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தின் போது மண்டபத்தால் சூழப்பட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[2] இந்த மண்டபத்தில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க புடைப்புச் சிற்பமானது கிருட்டிணன் கோவர்த்தன மலையைத் துாக்கி பசுக்கூட்டங்களையும், கோபியர்கள் மற்றும் ஆயர்களையும், பெருமழை மற்றும் வெள்ளத்திலிருந்து காத்த காட்சி மிகவும் கவித்துவத்துடன் படைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமானது இந்திய அல்லது அங்கோர் சிற்பக்கலையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.[5] மேலும், இங்கு கிருட்டிணன் பால் விற்கும் கோபியருடன் மகிழ்ந்து கூத்தாடும் காட்சிகளும் சிற்பங்களாக உள்ளன.[6][7]
கிழக்கு திசையை நோக்கி இந்த மண்டபமானது அமைந்துள்ளது. இதன் நீளம் 29 அடி (8.8 மீ) மற்றும் உயரம் 12 அடி (3.7 மீ). இது துாண்களால் தாங்கப்பட்ட மண்டபமாகும்.[8]
இந்த மண்டபம் பாறையில் பரப்புகளில் செதுக்கி எடுக்கப்பட்ட ஒன்பது புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இவை எல்லாமே காலத்தால் 7 ஆம் நுாற்றாண்டைச் சார்ந்தவையாகும். 16 ஆம் நுாற்றாண்டில் புதுப்பொலிவூட்டப்பட்டவையாகும்.
இங்குள்ள புடைப்புச் சிற்பங்களுள் முக்கியமான ஒன்று, கிருட்டிணன் தனது இடது கை விரலால் புராண கால கோவர்த்தன மலையைத் துாக்கி இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட பெரு மழையிலிருந்து காத்து நின்ற காட்சியாகும். மக்களும், கால்நடைகளும் கிருட்டிணன் விரலால் தாங்கிப்பிடித்த கோவரத்தன மலையின் கீழ் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். இந்த புராணக் கதையானது தேவர்களில் ஒருவரான இந்திரனோடு தொடர்புடையது. மதுராவில் வாழ்ந்த மக்கள் இந்திரனை மரியாதை செய்வதற்காக நடத்தி வந்த விழாவைத் தொடராமல் விட்டு விட்ட காரணத்தால் எரிச்சலடைந்ததாகவும், அதன் காரணமாக அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வினை அச்சுறுத்தும் வகையில் பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே கிராமத்தில் வசித்து வந்த கிருட்டிணன் கிராமத்து மக்களையும், கால்நடைகளையும் காக்கும் விதமாக மதுராவிற்கு அருகில் இருந்த கோவர்த்தன குன்றைத் துாக்கி குடை போல பிடித்து கிராமம், அதன் மக்கள் மற்றும் ஆநிரை ஆகியவற்றைக் காத்து நின்றதாக இக்காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த புடைப்புச் சிற்பத்தில், கிருட்டிணன் தனது வலது புறத்தில் மூன்று பெண்களால் சூழப்பட்டவாறு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பெண் கிருட்டிணனின் குழந்தைப் பருவ காதலி ராதா ஆவார். கூடுதலாக, பசுக்கூட்டங்களும், கிராம மக்களும் உள்ள பிம்பங்களும் உள்ளன.[8][9]
மற்றுமொரு புடைப்புச் சிற்பத்தில் கிருட்டிணன் மகிழ்ச்சியான மன நிலையில் கோபியருடன் களிக்கூத்தாடும், தெய்வப் பிறவியாக தனது இரட்டை நிலைப்பாட்டை விளக்கும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[9][10][10][11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)