கிரேக்க வீர யுகம் (Greek Heroic Age) என்பது கிரேக்கத் தொன்மங்களில், கிரேக்கர்கள் தெசலிக்கு வருவதற்கும் திராயில் இருந்து கிரேக்கம் திரும்புவதற்கும் இடைப்பட்டக் காலமாகும். [1] இது மனிதனின் ஐந்து யுகங்களில் ஒன்றாக எசியோடால் வரையறுக்கப்பட்டது. [2] இதன் காலம் தோராயமாக ஆறு தலைமுறைகள்; இந்தக் காலத்தில் குறிக்கப்படும் மாவீரர்கள் தெய்வீகமானவர்களாக இல்லாவிட்டாலும், மனிதனுக்கும் அப்பாற்பட்டவர்கள் மற்றும் ஓமரின் இலக்கியத்தில் கொண்டாடப்பட்டார்கள். [1]
இந்தக் காலகட்டமானது தோராயமாக கி.மு. 1100 முதல் கி.மு. 1300 வரையிலான 200 ஆண்டுகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள்தான் பண்டைய கிரேக்க நாடோடிப் பாடல்களின் பொருளாக இருந்தன. இக்காலத்தில் வாழ்ந்த எல்லாரோலும் மதிக்கப்பட்ட மாவீரர்களைப் புகழ்ந்து கிரேக்கத்தில் சுற்றிவந்த பாடகர்கள் (தமிழக பாணர் போல) பாடினர். இவை பல தலைமுறையாக வாழ்மொழி இலக்கியமாக பாடப்பட்டு வந்தன. அதனால் காலவோட்டத்தில் சில மாற்றங்களையும் அடைந்தன. பின்னர் இவை எழுத்து வடிவம் பெற்றன. இவற்றை கோவையாக தொகுத்து ஓமர் இலியட், ஒடிசி என்னும் காவியங்களைப் படைத்தார்.[3]
அர்கோனாடிக் பயணம் மற்றும் திரோஜன் போர் போன்ற நிகழ்வுகளின் அடிப்படையில் கிரேக்க மாவீரர்களை தோராயமான காலவரிசையில் வரிசைப்படுத்த இயலும்.
துவக்ககால கிரேக்க மாவீரர்கள் பலர் கடவுள்களிடமிருந்து வந்தவர்கள் மற்றும் பல்வேறு நகர-அரசுகளின் உருவாக்கக் கதைகளின் மாந்தர்களாக இருந்தனர். பிற்கால நாயகர்களின் மூதாதையர்களாகவும் இருந்தனர். போசைடானின் பேரனான ஃபீனீசிய இளவரசர் காட்மஸ், முதல் கிரேக்க மாவீரன் மற்றும் தீப்ஸ் நகரின் நிறுவனர் ஆவார். [4]
பெர்சியஸ், அவரது கொள்ளுப் பேரன் ஹெராக்கிள்ஸ் [5] பலகாலத்துக்கு முன்பே தனது வீரசாகசங்களுக்கு பிரபலமானவர். இவர் சியுசின் மகன். பெர்ஸ் மெடூசாவின் தலையைத் துண்டித்து, ஆந்த்ரோமெடாவை கடல் அசுரன் செட்டஸிடமிருந்து காப்பாற்றினார், மேலும் மைசீனாவின் புகழ்பெற்ற நிறுவனர் ஆவார்.
ஏகஸ் ஜீயஸின் மகனும் ஆவார். பெல்லெரோஃபோன் ஓர்சிஸ் என்ற தேவகன்னியிலிருந்து வந்தவர் . பெலோபொன்னீஸில் உள்ள பீசாவின் அரசர் ஓனோமஸ் எரேசின் மகன்.