கிறிஸ்டின் அகுல்லோ (Christine Akullo) (பிறப்பு 1990 சூன் 23) இவர் ஓர் உகாண்டா பாராலிம்பிக் தடகள வீரராவார். டி 13 பிரிவில் போட்டியிடுகிறார். மொசாம்பிக், மாபுடோவில் நடந்த 2011 அனைத்து ஆப்பிரிக்கா விளையாட்டிலும், 2015 ஆல் ஆப்பிரிக்கா விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் 100 மீ ஒட்டத்தில் தங்கம் வென்றார். [1] இலண்டனில் 2012 கோடைகால பாராலிம்பிக்கில் உகாண்டாவின் கொடி ஏந்தியவராகவும் இருந்தார். [2]
இவர் உகாண்டாவின் சொரோட்டி மாவட்டத்தின் அபோக்கில் ஜோசப் அயோம் , ஜென்னட் ரோஸ் அகிரோ ஆகியோருக்குப் பிறந்தார். 1998 இல் மலேரியாவால் பாதிக்கப்பட்ட பின்னர், இவர் ஓரளவு பார்வையற்றவராக ஆனார். [3] [2]
1996 மற்றும் 2004 க்கு இடையில், இவர் தனது ஆரம்பக் கல்வியை எம்பலே மாவட்டத்தில் உள்ள நமதலா தொடக்கப்பள்ளியில் பெற்றார். பின்னர் இவர் 2006 இல் சொரொட்டியில் உள்ள கண்பார்வையற்றவருக்கான புனித பிரான்சிஸ் மடேரா பள்ளியில் சேர்ந்தார். 2011 இல் தனது ஏ- தரத்தை முடித்தார். [4] [1] உள்ளூரில் இவர் அமெரிக்காவின் வர்ஜீனியா, ரிச்மண்டில் உள்ள ஒரு குழந்தை மேம்பாட்டு அமைப்பின் மூலம் உதவித் தொகை பெற்றார். மேலும் இவர் விளையாட்டு அறிவியலில் இளங்கலை பட்டம் பெற செப்டம்பர் 2012 இல் மேக்கரேர் பல்கலைக்கழகத்தில் சேரப்போவதாக தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமுரியா மாவட்டத்தில் உள்ள மோருங்கதுனி பகுதியில் இவர் வசிக்கிறார். [5]
2007 ஆம் ஆண்டில் இவர் தேசிய அணியில் சேர்ந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் சொரொட்டியில் இருந்தபோதுதான் இவர் பாரா-தடகளத்தை எடுத்தார் என்று பிற வட்டாரங்கள் கூறுகின்றன. [3] இவர் 100 மீ, 200 மீ மற்றும் 400 மீ.போன்ற பல மாவட்டப் போட்டிகளில் பங்கேற்றார். [1]
டெய்லி மானிட்டர் என்ற இதழின் கூற்றுப்படி, 2010 ஆம் ஆண்டில் நைரோபி, கென்யாவில் நடந்த கிரேட் லேக்ஸ் போட்டியில் இவரது முதல் சர்வதேச பந்தயம் நடைபெற்றது. அதில் இவர் 100 மீ, 200 மீ மற்றும் 400 மீ. போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றார். [1] மொசாம்பிக்கின் மாபுடோவில் நடைபெற்ற ஆப்பிரிக்கா விளையாட்டுப் போட்டியில் பெண்கள் டி 13 100 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். [6]
2015 ஆம் ஆண்டில், பிராசாவில் நடைபெற்ற ஆப்பிரிக்கா விளையாட்டுப் போட்டியில் பெண்கள் டி 13 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இவர் 13.34 வினாடிகளில் ஓடி மற்றொரு தங்கப் பதக்கம் வென்றார். [2] பின்னர் 2017 ஆம் ஆண்டில், இலண்டனில் நடந்த உலக பாரா தடகளப் போட்டியில் டி 13, எஃப் 13 100 மற்றும் 400 மீ. பிரிவுகளில் பங்கேற்றார். [7]
அந்த ஆண்டு நவம்பரில் துபாயில் நடைபெற்ற 2019 உலக பாரா தடகளப் போட்டிகளில் இவர், உகாண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் இவர் டி 13 100 மீ இரண்டாவது அரையிறுதியின் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதனால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தார். [8]
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link)