கிலோபாகை மீச்சிறு தொலைநோக்கி ( அல்லது கெல்ட்) (The Kilodegree Extremely Little Telescope) ( KELT) என்பது இரண்டு எந்திரன்வகைத் தொலைநோக்கிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வானியல் கண்காணிப்பு அமைப்பாகும். அவை பொலிவான விண்மீன்களைச் சுற்றிக் கடக்கும் புறக்கோள்களை கணக்கெடுப்பை நடத்துகின்றன. [1][2][3][4][5] திட்டம் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறை உறுப்பினர்களால் கூட்டாக, வாண்டர்பில்ட் பல்கலைக்கழக இயற்பியல் வானியல் துறை , இலெகை பல்கலைக்கழக இயற்பியியல் துறை, தென்னாப்பிரிக்க வானியல் ஆய்வகம் (SAAO) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேலாளப்படுகிறது.