கிளியூர் அருவி | |
---|---|
![]() கிளியூர் அருவி | |
![]() | |
அமைவிடம் | ஏற்காடு |
ஆள்கூறு | 11°46′00″N 78°14′00″E / 11.766667°N 78.233333°E |
மொத்த உயரம் | 300 அடி (91 m) |
கிளியூர் அருவி (Kiliyur Falls) என்பது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த சேர்வராயன் மலையில் உள்ள ஒரு அருவி ஆகும். ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது 300 அடி (91 மீட்டர்) உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது.[1]
இந்த அருவி ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கிமீ (1.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. வழியின் இறுதி 500 மீ (1,600 அடி) தொலைவு செப்பனிடப்படாத செங்குத்தான வழியைக் கொண்டுள்ளது. நீர் நிலைகளில் அதிகபட்சம் நீர் இருக்கும் போதும் பருவமழை நேரத்திலும் அருவியின் காட்சி சிறப்பாக இருக்கும்.[2] இந்த இடத்தைக் காண சிறந்த காலம் பருவமழை முடிந்தவுடன் ஆகும்.