கிளென் பிலிப்சு

கிளின் பிலிப்சு
Glenn Phillips
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிளென் டொமினிக் பிலிப்சு
பிறப்பு6 திசம்பர் 1996 (1996-12-06) (அகவை 28)
கிழக்கு இலண்டன், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குஇலக்குக் கவனிப்பாளர்/மட்டையாட்டம் பன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 278)3 சனவரி 2020 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 204)10 சூலை 2022 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப28 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்23
இ20ப அறிமுகம் (தொப்பி 74)17 பெப்ரவரி 2017 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப5 செப்டம்பர் 2023 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–2021/22ஆக்லாந்து
2017–2020யமைக்கா தலவாசு
2021–2022குளொசுட்டர்சயர்
2021–2023உவெல்சு பயர்
2021பார்படோசு ரோயல்சு
2021ராஜஸ்தான் ராயல்ஸ்
2022/23ஒட்டாகோ
2023சன்ரைசர்ஸ் ஐதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ப.ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 1 29 63 49
ஓட்டங்கள் 52 694 1,559 3,295
மட்டையாட்ட சராசரி 26.00 34.70 32.47 41.70
100கள்/50கள் 0/1 0/4 2/9 8/21
அதியுயர் ஓட்டம் 52 72 108 147
வீசிய பந்துகள் 432 87 2,847
வீழ்த்தல்கள் 12 2 40
பந்துவீச்சு சராசரி 36.50 52.00 41.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/37 1/11 4/70
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 15/– 39/2 46/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 09 நவம்பர் 2023

கிளென் டொமினிக்கு பிலிப்சு (Glenn Dominic Phillips, பிறப்பு: 6 திசம்பர் 1996) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியிலும், உள்ளூர் ஒட்டாகோ அணியிலும் விளையாடி வருகிறார். இவர் 2017 பெப்ரவரியில் தனது முதலாவது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை நியூசிலாந்து அணியில் விளையாடினார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கிளென் பிலிப்சு தென்னாப்பிரிக்காவில் பிறந்து தனது ஐந்தாவது அகவையில் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.[2]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

2017 பெப்ரவரியில், நியூசிலாந்தின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் சேர்க்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார்.[3][4] 2017 அக்டோபரில் இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்போட்டியில் நியூசிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ப.ஒ.நா) அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் இத்தொடரில் அவர் விளையாடவில்லை.[5] 2019 திசம்பரில், நியூசிலாந்தின்தேர்வு அணியில் சேர்க்கப்பட்டு ஆத்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடினார்.[6][7]

2020 நவம்பர் 29 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் தனது முதலாவது இ20ப சதத்தை அடித்தார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Glenn Phillips". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  2. "Ford Trophy: Forgotten Black Cap Glenn Phillips smashes 156, overshadows Guptill century". Stuff. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
  3. "Injured Guptill out of T20I, first two ODIs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
  4. "South Africa tour of New Zealand, Only T20I: New Zealand v South Africa at Auckland, Feb 17, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.
  5. "Phillips and Astle picked in updated New Zealand squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 October 2017.
  6. "Australia vs New Zealand: Glenn Phillips flown to Sydney as cover for sick duo". Stuff. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  7. "3rd Test, ICC World Test Championship at Sydney, Jan 3-7 2020". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
  8. "Glenn Phillips shades Colin Munro's record for fastest T20I ton by a New Zealander". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
  9. "New Zealand vs West Indies: Blazing century from Glenn Phillips spearheads win". Stuff. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]