கிழக்கு கரை | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | மோகன் நடராஜன் வீ. சண்முகம் |
கதை | பீ.வாசு |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரவிந்தர் |
படத்தொகுப்பு | பீ.மோகன்ராஜ் |
கலையகம் | ஸ்ரீ ராஜகாளி அம்மன் என்ரபிரைசஸ் |
வெளியீடு | செப்டம்பர் 20, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிழக்கு கரை என்பது 1991 இல் வெளிவந்த இந்திய நாடகத்தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் பிரபு, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மோகன் நடராஜன் மற்றும் வீ.சண்முகம் ஆகியோரால் தாயாரிக்கப்பட்டது. தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1991 செப்டம்பர் 20 அன்று வெளியிடப்பட்டது.[1][2]
முரளி (பிரபு) மற்றும் சேகர் (சந்திரசேகர்) ஆகியோர் நண்பர்கள். முரளி சேகருக்காக தனது வேலையை விட்டுக்கொடுக்கிறான். சேகருக்கு சுங்க அதிகாரியாக வேலை கிடைக்க முரளி தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அங்கு அவனது மாமாவின் மகள் விஜயலட்சுமி (குஷ்பு) அவனைக் காதலிக்கிறாள். முரளியின் தந்தை ரங்கநாதன் (விஜயகுமார்) பிரபல கடத்தல்காரனாக வேலை பார்க்கிறார். ஒருவழியாக தனது தந்தையின் வேலையைப்பற்றி முரளிக்கு தெரியவர வேலையை விட்டுவிடும்படி தனது தந்தையிடம் கேட்கிறான். தந்தையும் வேலையை விட்டுவிடுகிறார். இதற்குப் பழிவாங்க முரளியின் தந்தை கொல்லப்படுகிறார். அதன்பின்னர் முரளி பழிவாங்குவதுடன் கடத்தல் காரனாகவும் மாறுகிறான்.
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"எனக்கென பிறந்தவ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:23 |
"சந்நதி வாசலில் வந்தது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:55 |
"சிலுசிலு சிலுவெனக் காத்து" | கே. எஸ். சித்ரா | 4:50 |
"நந்தவனம் இந்தமனம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஏ. சீனி முகமது | 5:05 |
"இடியோசைகள் கேட்கட்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 |