கீதா சந்திரன் Geeta Chandran | |
---|---|
பிறப்பு | புதுதில்லி, இந்தியா |
அறியப்படுவது | நடனம் - பரதநாட்டியம் |
விருதுகள் | பத்மசிறீ |
கீதா சந்திரன் (Geeta Chandran) இந்தியாவின்[1] புது தில்லியைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். கர்நாடக இசை, தொலைக்காட்சி, நாடகம், ஆடற்கலை மற்றும் நடனக் கல்வி போன்ற பல பல்வேறு கலைத்துறைகளில் பணியாற்றியுள்ளார். நாட்டிய-விரிக்சா என்ற நடனப்பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவருமாவார். நாட்டின் நான்காவது உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில், கலைத்துறையில் இவரது பங்களிப்புகளுக்காக வழங்கி கௌரவித்தது[2]
பாரம்பரியக் கலைகளில் தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக, நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நாடக ஆளுமைகள், கல்வியாளர்கள், தத்துவவாதிகள், மொழியியலாளர்கள் மற்றும் ஆடை மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து கீதா சந்திரன் பணியாற்றியுள்ளார்.
.