குஞ்சநாகன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 195 - 196 |
முன்னிருந்தவர் | குச்சநாகன் |
முதலாம் சிறிநாகன் | |
அரச குலம் | முதலாம் லம்பகர்ண வம்சம் |
தந்தை | கனித்த திச்சன் |
குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் எனப் பலவாறாக அறியப்பட்டவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 181-182 என்றும்,[2] கிபி 193-195 என்றும்,[3] கிபி 186-187 என்றும்,[4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தமையனான குச்சநாகன் என்பவனைக் கொன்றுவிட்டு இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.
நாட்டின் படைத் தலைவனாக இருந்த குடநாகனின் மனைவியின் சகோதரன் சிரிநாகன் என்பவன், அரசனுக்கு எதிராகத் திரும்பித் தனக்கு ஆதரவான வலுவான படையுடன் வந்து அநுராதபுரத்தைக் கைப்பற்றிக் குடாநாகனை அகற்றிவிட்டுத் தானே அரசனானான்.