குமார் கார்த்திகேயா

குமார் கார்த்திகேயா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்குமார் கார்த்திகேயா சிங்
பிறப்பு26 திசம்பர் 1997 (1997-12-26) (அகவை 27)
குவாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடைசுழல் பந்து வீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–முதல்மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணி
2022–முதல்மும்பை இந்தியன்ஸ்
மூலம்: ESPNcricinfo, 26 செப்டம்பர் 2018

குமார் கார்த்திகேயா (Kumar Kartikeya)(பிறப்பு 26 திசம்பர் 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மத்தியப் பிரதேசத்தையும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] குமார் 26 செப்டம்பர் 2018 அன்று விஜய் ஹசாரே துடுப்பாட்டப் போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காகத் தனது ஏ தரப் போட்டியில் அறிமுகமானார்.[2] இதைத் தொடர்ந்து, இவர் 2018 நவம்பர் 28 அன்று ரஞ்சிக் கோப்பையில் மத்தியப் பிரதேசத்திற்காக அறிமுகமானார்.[3] கார்த்திகேயா 2019 மார்ச் 2 அன்று சையத் முசுடாக் அலி கோப்பைக்கான போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[4]

ஏப்ரல் 2022-இல், அர்சத் கான் காயம் காரணமாக விலகிய பின்னர், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்சத் கானுக்குப் பதிலாகக் கார்த்திகேயா விளையாடினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kumar Kartikeya". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
  2. "Elite, Group B, Vijay Hazare Trophy at Delhi, Sep 26 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
  3. "Elite, Group B, Ranji Trophy at Thiruvananthapuram, Nov 28 - Dec 1 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 November 2018.
  4. "Group C, Syed Mushtaq Ali Trophy at Indore, Mar 2 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.
  5. "IPL 2022: Kumar Kartikeya replaces injured Arshad Khan for Mumbai Indians". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]