குமார கம்பணன்

குமார கம்பணன் விஜய நகரப் பேரரசின் இளவரசன் ஆவான்.கிபி. 1336-ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். புக்கராயர் விஜயநகர பேரரசரானதும் தமிழ் பகுதிகளைக் கைப்பற்ற இவர் நியமிக்கப்பட்டார். இவர் கிபி 1359-இல் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய அரசர் இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரை சுல்தானகம் மீது 1378-இல் படையெடுத்து அங்குச் சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். எனினும் மதுரை ஆட்சியைப் பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான தென்காசிப் பாண்டியர்களிடம் வழங்காமல் ஆட்சி நடத்த நாயக்க தளபதிகளை நியமித்தார். குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களைப் பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.

மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவர் மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் மதுரா விஜயம் என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார். [1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. William Joseph Jackson (2005). Vijayanagara Voices: Exploring South Indian History and Hindu Literature. Ashgate Publishing, Ltd. p. 61. ISBN 978-0-7546-3950-3.
  2. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=224&pno=392
  3. http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5786553.ece