மே 2017 இல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | குருணால் இமான்சு பாண்டியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 மார்ச்சு 1991 வடோதரா, குசராத்து, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | ஹர்திக் பாண்டியா (இளைய சகோதரர்) Nataša Stanković (sister-in-law) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 78) | 4 நவம்பர் 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 7 நவம்பர் 2019 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 24 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–தற்போது வரை | வடோதரா துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–தற்போது வரை | மும்பை இந்தியன்ஸ் (squad no. 24) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 19 March 2021 |
குருணால் இமான்சு பாண்டியா (Krunal Himanshu Pandya பிறப்பு: மார்ச் 24, 1991) ஒரு சர்வதேச இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார் . இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், இவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடது-கை வழமைச் சுழல் பந்து வீச்சாளர். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் வடோதரா துடுப்பாட்ட அணிக்காகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். . [1] நவம்பர் 2018 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். [2]
அக்டோபர் 6, 2016 இல் வடோதரா துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2016-2017 ரஞ்சி கோப்பைத் தொடரில் அறிமுகமானார். [3] அதே ஆண்டில் நடந்த விஜய் அசாரே கோப்பைக்கான தொடரில் 8 போட்டிகளில் 366 ஓட்டங்களை 45.75 எனும் மட்டையாட்ட சராசியுடனும் 11 இலக்குகளையும் கைப்பற்றி அதிக இலக்குகள் மற்றும் ஓட்டங்கள் எடுத்த வடோதரா துடுப்பாட்ட அணி வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
2016 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் பாண்டியாவை ₹ 2 கோடிக்கு வாங்கியது. ஏப்ரல் 2016 இல்வான்கடே மைதானத்தில் குஜராத் லயன்சு அணிக்கு எதிராக மும்பை அணி சார்பாக அறிமுகமானார். தினேஷ் கார்த்திக்கை தனது முதல் இலக்காகக் கைப்பற்றினார். 2016 ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பிற்காக கிரிகின்போ மற்றும் கிரிக்பஸ் ஐபிஎல் லெவன் அணியில் இடம் பெற்றார். [4] [5]
அக்டோபர் 2018 இல், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணங்களுக்காக இந்தியாவிற்கான பன்னாட்டு இருபது அணியில் பாண்டியா பெயரிடப்பட்டார். [6] 4 நவம்பர் 2018 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்கள் எடுத்தார். [7]
இவர் ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர். [8] 2017 இல் பங்கூரி சர்மா என்பவரை மணந்தார். [9] [10]