குரோக்கர் தேசியப் பூங்கா | |
---|---|
Crocker Range National Park | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
குரோக்கர் மலைத்தொடரில் அதிரல் வகைத் தாவரம் | |
அமைவிடம் | சபா, மலேசியா |
அருகாமை நகரம் | கோத்தா கினபாலு, தம்புனான், கெனிங்காவ் |
ஆள்கூறுகள் | 5°32′10″N 116°6′10″E / 5.53611°N 116.10278°E |
பரப்பளவு | 1,399 km2 (540 sq mi) |
நிறுவப்பட்டது | 1984 |
நிருவாக அமைப்பு | சபா வனப்பூங்காக்கள் அமைப்பு |
அலுவல் பெயர் | குரோக்கர் தேசியப் பூங்கா |
வகை | Natural |
வரன்முறை | vii, viii, ix, x |
தெரியப்பட்டது | 2000 (24-ஆவது அமர்வு) |
உசாவு எண் | 1013 |
பகுதி | ஆசியா-பசிபிக் |
குரோக்கர் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Banjaran Crocker; ஆங்கிலம்: Crocker Range National Park) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு, தம்புனான், கெனிங்காவ் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.
1984-ஆம் ஆண்டில், சபா மாநில அரசால், ஒரு தேசியப் பூங்காவாக நிறுவப்பட்டது. இருப்பினும் இந்தப் பகுதி முன்பு வன காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது சபா வனப்பூங்காக்கள் அமைப்பு இந்தப் பூங்காவைப் பராமரித்து வருகிறது.[1]
குரோக்கர் தேசியப் பூங்கா 75 கி.மீ. நீளமும் 15 கி.மீ. அகலமும் கொண்டது. சிங்கப்பூர் தீவைப் போல இரண்டு மடங்கு பெரியது. கோத்தா கினபாலு, தம்புனான், கெனிங்காவ் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்து இருந்தாலும் இந்தப் பூங்காவிற்குள் 8 மாவட்டங்கள் உள்ளன. [2]
இந்தப் பூங்கா, 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளது. அத்துடன் குரோக்கர் மலைத் தொடரை உள்ளடக்கிய மிகப் பெரிய ஒரு வனப் பூங்காவாகப் பிரபலம் அடைந்து உள்ளது.
இந்தப் பூங்கா 1,399 கிமீ² பரப்பளவில், மிகப் பெரிய மலைக் காடுகளை கொண்டு உள்ளது. இங்கு போர்னியோ தீவிற்கு மட்டும் சொந்தமான பல வகையான தாவரங்கள்; விலங்கினங்கள் உள்ளன.[3]
குரோக்கர் தேசியப் பூங்கா தலைமையகத்திற்கு அருகில், வருகையாளர்கள் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளை வழங்கும் ஒரு விடுதியும் உள்ளது.
தவிர அங்கே ஒரு கண்காட்சி மையம்; ஒரு பூச்சிகள் கூடம்; ஒரு பரணிகள் கூடம் (fernarium); ஒரு கண்காணிப்புக் கோபுரம் மற்றும் மலையேற்றப் பாதைக்கான தொடக்க இலக்கு போன்ற வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
ஓராங் ஊத்தான்கள், கிப்பன்கள், வட்டக் கண்கள் கொண்ட டார்சியர் விலங்குகள் (furry tarsier), நீண்ட வால் கொண்ட மக்காக்குகள் (Macaque) போன்ற ஐந்து வகையான அரிதான விலங்கினங்கள் உள்ளன.
குரோக்கர் தேசியப் பூங்காவில் காணப்படும் அரிய வகைத் தாவரங்கள்:
5°32′N 116°6′E / 5.533°N 116.100°E{{#coordinates:}}: cannot have more than one primary tag per page