குரோமியம்(II) அயோடைடு

குரோமியம்(II) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
குரோமசு அயோடைடு
இனங்காட்டிகள்
13478-28-9
ChemSpider 13318420
InChI
  • InChI=1S/Cr.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: BMSDTRMGXCBBBH-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18626753
  • [Cr+2].[I-].[I-]
பண்புகள்
CrI2
வாய்ப்பாட்டு எடை 305.81 g·mol−1
தோற்றம் கருப்பு நிற நீருறிஞ்சும் திண்மம்
அடர்த்தி 5.196 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(II) அயோடைடு (Chromium(II) iodide) CrI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். செம்பழுப்பு [1]அல்லது கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. குரோமியம்(III) அயோடைடு உப்பை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி குரோமியம்(II) அயோடைடை தயாரிக்க முடியும். பல உலோக ஈரயோடைடுகளைப் போலவே, CrI2 சேர்மமும் "காட்மியம் அயோடைடு கட்டமைப்பு " மையக்கருத்தை ஏற்றுக்கொள்கிறது, அதாவது, அயோடைடு ஈந்தணைவிகளைப் பாலம் அமைப்பதன் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட எண்முக Cr(II) மையங்களின் தளங்களைக் கொண்டுள்ளது. இதன் d4 கட்டமைப்பின் விளைவுகளை பிரதிபலிக்கும் வகையில், குரோமியத்தின் ஒருங்கிணைப்பு கோளம் மிகவும் உருக்குலைந்திருக்கும்.[1][2][3]

செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலத்துடன் குரோமியம் தூளைச் சேர்த்து சூடேற்றினால் நீல நிறத்தில் நீரேற்றப்பட்ட குரோமியம்(II) அயோடைடு கிடைக்கும். இவை தொடர்புடைய அசிட்டோ நைட்ரைல் அணைவுச் சேர்மங்களாக மாற்றப்படலாம்.[4]

Cr + n H2O + 2 HI → CrI2(H2O)n + H2


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1019–1022. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Tracy, J. W.; Gregory, N. W.; Stewart, J. M.; Lingafelter, E. C. (1962). "The Crystal Structure of Chromium(II) Iodide". Acta Crystallographica 15 (5): 460–463. doi:10.1107/S0365110X62001152. 
  3. Vest, Brian; Hermann, Andreas; Boyd, Peter D. W.; Schwerdtfeger, Peter (2010). "Nucleation of Antiferromagnetically Coupled Chromium Dihalides: From Small Clusters to the Solid State". Inorganic Chemistry 49 (7): 3169–3182. doi:10.1021/ic901949a. 
  4. Holah, David G.; Fackler, John P. (1967). "Chromium(II) Salts and Complexes". Inorganic Syntheses: 26–35. doi:10.1002/9780470132418.ch4.