குர்மி மக்கள் | |
---|---|
மதங்கள் | இந்து |
மொழிகள் | குர்மி, இந்தி, சத்தீஷ்கரி, மராத்தி, கொங்கணி, குசராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | குஜராத், பிகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம்,தமிழ்நாடு, மகாராட்டிரா, தமிழ்நாடு மற்றும் நேபாளம் |
குர்மி மக்கள், (Kurmi) இந்தியாவிலும், நேபாளத்திலும் வேளாண்மை தொழில் செய்யும் இந்து சமூகத்தினர் ஆவர். குர்மி சமூகத்தினர் இந்தியாவின் குஜராத், பிகார் உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் மற்றும் நேபாளத்திலும் வாழ்கின்றனர்.
குர்மி மக்கள் குர்மி, இந்தி, சத்தீஷ்கரி, மராத்தி, கொங்கணி, குசராத்தி, ஒரியா, தெலுங்கு, தமிழ் மொழிகள் பேசுகின்றனர்.
18ஆம் நூற்றாண்டில் முகலாயர் ஆட்சி முடிவுறும் வரை, குர்மி சமூகத்தினர் ஆயுதங்தாங்கிய கால்நடைகளை மேய்க்கும் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நிலையான இடங்களில் தங்கி வேளாண் குடிகளையும் மற்றும் நகர மக்களையும் சார்ந்து வாழ்ந்துள்ளனர்.[1] படிப்படியாக குர்மி சமூகத்தினர் வேளாண்மைத் தொழில்களில் ஈடுபட்டனர்.[2]
குர்மி மக்கள் திராவிடர்கள், ஆரிய-திராவிடர்கள், இந்தோ ஆரியர்கள் என மூன்று இனத்தவராக உள்ளனர்.
1909ல் பிரித்தானிய இந்திய அரசால் வெளியிடப்பட்ட அரசானையின் படி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் குர்மி மக்களை ஆரிய-திராவிடர்கள் என்றும், மத்திய மாகாணத்தின் குர்மி மக்களை திராவிடர்கள் என்றும் வகைப்படுத்தினர்.[3][3]
{{cite book}}
: |first1=
has generic name (help)