பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரின் டையாக்சைடு
| |
வேறு பெயர்கள்
குளோரின்(I)ஆக்சைடு,குளோரின் பெராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12292-23-8 | |
ChemSpider | 109895 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123287 |
| |
பண்புகள் | |
Cl2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 102.905 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ClO இருபடி (ClO dimer) என்பது இருகுளோரின் ஈராக்சைடு (dichlorine dioxide), அல்லது குளோரின் பெராக்சைடு (chlorine peroxide) என்றும் அழைக்கப்படுகிறது.[1] இம்மூலக்கூற்றுச் சேர்மத்தினுடைய மூலக்கூறு வாய்ப்பாடு ClOOCl ஆகும். ஓசோன்துளை உருவாக்கத்தில் இச்சேர்மம் முக்கியப்பங்கு வகிக்கிறது [2]. புற ஊதா ஒளியால் கதிர்வீச்சேற்றம் அடையும்போது ClO இருபடி வினையூக்கியாகச் செயல்பட்டு ஓசோனை ஆக்சிசனாக மாற்றுகிறது.[3]
குளோரின் மூலக்கூறுடன் ஓசோன் சேர்த்து சீரொளி அல்லது புறஊதா ஒளிச்சிதைவுக்கு உட்படுத்தினால் குளோரின் ஒராக்சைடு இருபடியை உருவாக்கமுடியும்[1]. குளோரின் மூலக்கூறுகளை அணுக்களாகப் பிரிக்க 248, 308, அல்லது 352 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட கிளர்வுற்ற ஈரணு மூலக்கூற்றுச் சீரொளி உபயோகப் படுத்தப்படுகிறது[3]. இருபுளோரோயிருகுளோரோமீத்தேனும் குளோரின் அணுக்களை உருவாக்கும் மூலமாக செயல்படுகிறது[1]. இங்ஙனமே நுண்ணலை வெளியேற்றமும் குளோரின் மூலக்கூறுகளை அணுக்களாகப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டு குளோரின் பெராக்சைடுகளை உருவாக்க முடியும்[3]
குளோரின் பெராக்சைடு அதிகப்பட்சம் 245 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புறஊதா ஒளிக்கதிர்களை உறிஞ்சுகிறது. மேலும், இதனால் 350 நா.மீ அளவு வரைகூட எந்த அளவுக்கு குறைவாகவும் அவற்றை உறிஞ்சமுடியும். ஓசோனும் 300 நா.மீ வரை உறிஞ்சும் இயல்புடையது [1] என்பதால் இச்சேர்மம் முக்கியத்துவம் பெறுகிறது. குளோரின் ஓராக்சைடு மூலக்கூறில் உள்ள குளோரின் – ஆக்சிசன் (Cl-O) பிணைப்பின் நீளம் 1.704 Å மற்றும் ஆக்சிசன் – ஆக்சிசன் (O-O) பிணைப்பின் நீளம் 1.426 Å ஆகும்[4]. குளோரின் ஓராக்சைடு - ஆக்சிசன் (ClOO) பிணைப்புக் கோணம் 110.1° மற்றும் இரண்டு குளோரின் ஓராக்சைடு – ஆக்சிசன் தளங்களுக்கிடையிலான இருதளமிடை கோணம் 81° ஆகவும் இருக்கிறது[4]