மரு. குவாஜா அப்துல் ஹமீத்(Khwaja Abdul Hamied) - (31 அக்டோபர் 1898 - 1972). அவர் ஒரு இந்திய தேசியவாதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு விஞ்ஞானி ஆவார், இவர் 1935 ஆம் ஆண்டில் இந்தியாவின் பழமையான மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லாவை நிறுவினார். அவரது மகன் யூசுப் ஹமீத் அவருக்கு 52 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை ஏற்று நடத்தி வருகின்றார். [1]
குவாஜா அப்துல் ஹமீத் உத்தரபிரதேசத்தின் அலிகரில் குவாஜா அப்துல் அலி மற்றும் மசூத் ஜஹான் பேகம் ஆகியோருக்குப் பிறந்தார்.[2] உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியில் உள்ள பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் பி.எச்.டி பட்டங்களை பெற்றார். அவர் மகாத்மா காந்தி மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர்களில் ஒருவரான சாகீர் உசேனின் சீடராகவும் இருந்தார். 1953 ஆம் ஆண்டு மும்பை மாநகரத்தின் செரிப்பாகவும் பதவி வகித்தார். [3]