கூட்டரசு சேமிப்பு வங்கி என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி ஆகும் இது திசம்பர், 23, 1913 அன்று உருவாக்கப்பட்டது[1]. 1907 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக இவ்வங்கி உருவாக்கப்பட்டது. அமெரிக்க டொலர்கள் அச்சிடுவது, விலைவாசியை சீராக பராமரிப்பது, அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவது கூட்டரசு சேமிப்பு வங்கியின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும். கூட்டரசு சேமிப்பு வங்கியின் பொறுப்பு விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வேலையின்மையை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதும் ஆகும். பணத்தின் அளவை அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் கூட்டரசு சேமிப்பு வங்கி பணத்தை அச்சிடுகிறது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான அது உலகத்தின் சேம நாணயமான அமெரிக்க டொலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.
{{cite book}}
: CS1 maint: location (link)