கூலிம்-பண்டார் பாரு (P018) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Kulim-Bandar Baharu (P018) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கூலிம் மாவட்டம்; பண்டார் பாரு மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | கூலிம்-பண்டார் பாரு தொகுதி |
முக்கிய நகரங்கள் | பண்டார் பாரு; கூலிம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | ரோசுலான் ஆசிம் (Roslan Hashim) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 90,141 |
தொகுதி பரப்பளவு | 690 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kulim-Bandar Baharu; ஆங்கிலம்: Kulim-Bandar Baharu Federal Constituency; சீனம்: 居林-万拉峇鲁国会议席) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டம் (Kulim District); பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P018) ஆகும்.
கூலிம் மற்றும் பண்டார் பாரு என்ற இரண்டு நகரங்களின் பெயரால் இந்த தொகுதிக்கு பெயரிடப்பட்டு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[1]
கூலிம்-பண்டார் பாரு தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 41 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]
கூலிம் மாவட்டம் (மலாய்:Daerah Kulim; ஆங்கிலம்:Kulim District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் பினாங்கு மாநிலத்தை எல்லையாகக் கொண்டு உள்ளது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே (27 km (17 mi)) தொலைவில் உள்ளது.
கூலிம் மாவட்டம் 15 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[3] கூலிம் மாவட்டத்தைக் கூலிம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது.
பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District) கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.
இந்த மாவட்டத்திற்கு ஒரு கட்டத்தில் பண்டார் கரஸ்டேசியா (Bandar Crustacea) என மறுபெயரிட முன்மொழியப்பட்டது. அத்துடன் பண்டார் பாரு ஒரு நகரம், ஒரு மாவட்டம் மற்றும் ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும். கெடா மாநிலத்தின் தெற்கு முனையில் உள்ளது.[4])
கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில், கெடா - பினாங்கு - பேராக் மாநிலங்களின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது.
கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2022) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பகுதி உருவாக்கப்பட்டது | |||
கூலிம்-பண்டார் பாரு | |||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1959–1963 | டான் டை செக் (Tan Tye Chek) |
கூட்டணி (ம.சீ.ச) |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1963–1964 | டான் டை செக் (Tan Tye Chek) |
கூட்டணி (ம.சீ.ச) |
2-ஆவது | 1964–1969 | தை குவான் யாங் (Tai Kuan Yang) | |
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[5] | ||
3-ஆவது | 1971–1973 | தாய் குவான் யாங் (Tai Kuan Yang) |
கூட்டணி (ம.சீ.ச) |
1973–1974 | பாரிசான் (மசீச) | ||
4-ஆவது | 1974–1978 | அசாகரி முகமட் தாயிப் (Azahari Md. Taib) |
பாரிசான் (அம்னோ) |
5-ஆவது | 1978–1982 | அப்துல் காதிர் சேக் பட்சிர் (Abdul Kadir Sheikh Fadzir) | |
6-ஆவது | 1982–1986 | ||
கூலிம்-பண்டார் பாரு | |||
7-ஆவது | 1986–1990 | அப்துல் காதிர் சேக் பட்சிர் (Abdul Kadir Sheikh Fadzir) |
பாரிசான் (அம்னோ) |
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | ||
10-ஆவது | 1999–2004 | ||
11-ஆவது | 2004–2008 | ||
12-ஆவது | 2008–2010 | சுல்கிப்லி நூர்டின் (Zulkifli Noordin) |
பி.கே.ஆர் |
2010–2013 | சுயேச்சை | ||
13-ஆவது | 2013–2018 | அப்துல் அசிஸ் பட்சிர் (Abd. Aziz Sheikh Fadzir) | |
14-ஆவது | 2018–2022 | சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (Saifuddin Nasution Ismail) |
பாக்காத்தான் (பிகேஆர்) |
15-ஆவது | 2022–தற்போது | ரோசுலான் ஆசிம் (Roslan Hashim) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 90,141 | - |
வாக்களித்தவர்கள் | 71,616 | 79.40% |
செல்லுபடி வாக்குகள் | 70,340 | 100.00% |
செல்லாத வாக்குகள் | 1276 | - |
பெரும்பான்மை | 13,061 | 18.56% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
அசுமான் நசுருதீன் (Roslan Hashim) |
பெரிக்காத்தான் | 34,469 | 49.00% | |
சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (Mohamad Sofee Razak) |
பாக்காத்தான் | 21,408 | 30.44% | |
முகார் உசேன் (Muhar Hussain) |
பாரிசான் | 13,872 | 19.72% | |
முகமட் யுசுரிசால் யூசோப் (Muhamad Yusrizal Yusuf) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 591 | 0.84% |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N35 | கூலிம் | இயோ கெங் சுவான் (Yeo Keng Chuan) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N36 | பண்டார் பாரு | நோர்சப்ரினா முகமட் நோர் (Norsabrina Mohd. Noor) |
பாரிசான் (அம்னோ) |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)