நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus[1] |
வல எழுச்சிக் கோணம் | 19h 54m 56.65923s[2] |
நடுவரை விலக்கம் | +46° 29′ 54.7936″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 18.19[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4V[4] |
தோற்றப் பருமன் (G) | 16.685±0.003[2] |
தோற்றப் பருமன் (J) | 13.542±0.029[4] |
தோற்றப் பருமன் (H) | 12.929±0.035[4] |
தோற்றப் பருமன் (K) | 12.610±0.028[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 41.465 மிஆசெ/ஆண்டு Dec.: 132.351 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 8.1366 ± 0.0457[2] மிஆசெ |
தூரம் | 401 ± 2 ஒஆ (122.9 ± 0.7 பார்செக்) |
விவரங்கள் [5] | |
திணிவு | 0.334+0.080 −0.059 M☉ |
ஆரம் | 0.347+0.068 −0.049 R☉ |
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்) | 0.0115 L☉ |
வெப்பநிலை | 3219+89 −63 கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கெப்ளர்-445 (Kepler-445) என்பது சிக்னசு விண்மீன் தொகுப்பில் 401 ஒளியாண்டுகள் (123 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ள ஒரு செங்குறுமீனாகும். இதை மூன்று புறக்கோள்கள் சுற்றிவருகின்றன. இது கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியில் இருந்து தரவுகளைப் பயன்படுத்தி கோள்கடப்பு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் எந்த ஒரு கோளும் வாழக்கூடிய மண்டலத்திற்குள் சுற்றிவரவில்லை. [7]
கெப்ளர்-445பி, சி, டி ஒவ்வொன்றும் 3, 5, மற்றும் 8 நாட்கள் வட்டனையில் கெப்ளர்-445 விண்மீனைச் சுற்றிவருகின்ரன. மேலும், இவற்றின் சமனிலை வெப்பநிலை முறையே 401 K (128 °C; 262 °F), 341 K (68 °C; 154 °F), 305 K (32 °C; 89 °F), ஆகும்.. புவியை விட 2.72 மடங்கு ஆரம் கொண்ட, கெப்ளர்-445சி ஒரு சிறிய-நெப்டியூன் கோள் ஆகும், இது ஒரு கொந்தளிப்பான ஆவியாகும் உட்கூறுடன் இருக்கலாம், மேலும் இது ஜிஜே 1214 பி உடன் ஒப்பிடப்பட்டது. கெப்ளர்-445டி 1.33 ஆரம் கொண்ட புவியையை விட சற்று பெரியது .
|}