கெர்ரி சாண்ட்லர் | |
---|---|
பிற பெயர்கள் | மூன்றாம் தலைமுறை |
பிறப்பு | செப்டம்பர் 28, 1969 |
பிறப்பிடம் | ஈஸ்டு ஆரெஞ்சு, நியூ செர்சி, அமெரிக்கா |
தொழில்(கள்) | இசை வெளியீட்டாளர் |
இசைத்துறையில் | 1990–தற்போது |
வெளியீட்டு நிறுவனங்கள் | மேட்ஹவுஸ் ரெக்கர்ல்ஸ் பதிவகம் |
இணையதளம் | Official website |
கெர்ரி கமார் சாண்ட்லர் (பிறப்பு செப்டம்பர் 28, 1969) ஒரு அமெரிக்க தட்டிசைப்பாளர் மற்றும் பாடல் பதிவு தயாரிப்பாளர் ஆவார். [1] அவர் மின்னணுசார் இசையில் ஒரு முன்னோடி என்று அழைக்கப்பட்டார். [2]
ஜாஸ் இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் சாண்ட்லர் வளர்ந்தார். இவ்சரது பாடல்களில் நியூ ஜெர்சி வகைப் பாடல்களின் தாக்கங்களைக் காணலாம். அவரது தந்தை, ஜோசப் சாண்ட்லர், கெர்ரிக்கு சோல் இசைவகை, மின்னணுசார் இசை வடிவம், திசுகோ வகை இசை என பல் இசை விதங்களைக் கற்றுக்கொடுத்தார். பல நிகழ்ச்சிகளுக்கு தனது தந்தையுடன் சேர்ந்து சாண்ட்லர் செல்லத் தொடங்கினார். அவர் தனது 13 வயதில் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சில் உள்ள ராலி ராக்கெட் கிளப்பில் தனது இசைப்பதிவுகளை செய்யத் தொடங்கினார்.
14 வயதில், அவர் பாடல் பதிவிடங்களில் பயிற்சி பெருவதோடு மட்டும் அல்லது இசை தயாரிப்பையும் தொடங்கினார். [3] 1991 இல் அட்லாண்டிக் ரெக்கார்ட்ஸில் அவரது முதல் தனிப்பாடலான "சூப்பர் லவர்/கெட் இட் ஆஃப்" வெளியானதிலிருந்து, சாண்ட்லர் நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டார். [4] அவர் 1980களில் நியூ ஜெர்சியின் நெவார்க்கில் உள்ள கிளப் சான்சிபாரில் தட்டிசப்பாளராக இணந்தார். கிளப் சான்சிபார் என்பது நியூ ஜெர்சி சவுண்ட்டின் டீப் ஹவுஸ் அல்லது கேரேஜ் ஹவுஸின் தாயகம் ஆகும். [5] இதன் மூலம் பல இசைக் கலைஞர்கள் அறிமுகமாயினர்.
சாண்ட்லர் ஐக்கிய இராச்சியத்தில் மேட்ஹவுஸ் ரெக்கார்ஸ் பதிவின் நிறுவனர் ஆவார். அதன் பல பிரபல பாடல் வெளியீட்டளர்களில் ராய் அயர்ஸ் மற்றும் டென்னிஸ் ஃபெரர் ஆகியோர் அடங்குவர்[6].
2016 ஆம் ஆண்டில், அவர் தனது மூன்றாவது பதிவு நிறுவனமான காவோஸ் தியரியை நிறுவினார். இதில் தி மார்டினெஸ் பிரதர்ஸ் மட்டுமல்லாது, ஜேமி ஜோன்ஸ், சடோஷி டோமி, சேத் ட்ரோக்ஸ்லர் போன்ற குறிப்பிடத்தக்க கலைஞர்களின் வெளியீடுகளும் அடங்கும். [7]
பதிவுப் பாடல் தொகுப்புகள்
தனிப்பாடல்கள்
{{cite web}}
: Missing or empty |title=
(help); Missing or empty |url=
(help)
{{cite web}}
: Missing or empty |url=
(help)
{{cite web}}
: Missing or empty |url=
(help)
{{cite web}}
: Missing or empty |url=
(help)
{{cite web}}
: Missing or empty |url=
(help)