கேன்காக் உறுப்பு (Hancock's organ) என்பது வயிற்றுக்காலிகளின் பக்கவாட்டில் மறைந்து காணப்படும் உணர்ச்சி உறுப்பு ஆகும்.[1] சில கடல் நத்தைகளில் காணப்படும் இந்த உறுப்பு நீரின் வேதித் தன்மையினை-உணரும் உறுப்பு ஆகும்.[2] இந்த உறுப்பு பெரும்பாலான ஓபிஸ்தோபிராஞ்ச்களில் காணப்படுகிறது.[2]
ஆக்டியோனாய்டியா மற்றும் செபலாசுபீடியா வரிசையில் குமிழி குண்டுகள் மற்றும் கடலட்டைகளில் பெரும்பாலானவை கேன்காக் உறுப்புகள் உள்ளன.