கேப்டன் ராஜூ | |
---|---|
ஒரு கல்லூரி விழாவில் கேப்டன் ராஜூ | |
பிறப்பு | இராஜு தேனியல் 27 சூன் 1950 ஓமல்லூர், திருவாங்கூர் கொச்சி (தற்போது பத்தனம்திட்டா, கேரளம்), இந்தியா |
இறப்பு | 17 செப்டம்பர் 2018 கொச்சி, கேரளம், இந்தியா | (அகவை 68)
தேசியம் | இந்தியர் |
பணி |
|
இராஜூ தேனியல் | |
---|---|
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1971 – 1976 |
தரம் | தளபதி |
இராஜூ தேனியல் (Raju Daniel) (27 சூன் 1950 - 17 செப்டம்பர் 2018), கேப்டன் ராஜூ (Captain Raju) என்ற தனது திரைப் பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், ஓர் இந்திய இராணுவ அதிகாரியும், இந்திய நடிகரும் ஆவார். மலையாளம், பாலிவுட், தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களுக்காகவும், வில்லனாகவும் இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும், விளம்பரங்களிலும் தோன்றினார். மேலும் இரண்டு மலையாளப் படங்களையும் இயக்கியுள்ளார். நாடோடிக்கட்டு திரைப்படத்தில் பாவனாயி என்ற வேடத்தில் தோன்றிய இவரது நகைச்சுவை தொழில்முறை கொலையாளி கதாபாத்திரம் மலையாளத் திரையுலகில் ஒரு வழிபாட்டு மரபை தோற்றுவித்தது.[1][2]
இவர் நடித்துள்ள தமிழ் திரைபடங்கள் பின்வருமாறு: