கேம்ப்டோனி பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. கேம்ப்டோனி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் கேம்ப்டோனி (பெளலெஞ்சர், 1918) |
ஒலிகோடான் கேம்ப்டோனி, என்பது பொதுவாக கேம்ப்டோனி பட்டாக்கத்தி பாம்பு என்று அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தின் கொலுப்ரினே துணைக்குடும்பத்தில் ஒலிகோடான் பேரினத்தின் கீழ் உள்ள ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் தெற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்டது.
இதன் சிற்றினப் பெயர், காம்ப்டோனி, இதன் மாதிரியினைச் சேகரித்த கெர்பர்ட் கேம்ப்டோன் நினைவாக இடப்பட்டுள்ளது.[2]
ஓ. கேம்ப்டோனி சீனா (யுன்னான்),[3] மற்றும் வடக்கு மியான்மர் காணப்படுகிறது.[1][3]
ஓ. கேம்ப்டோனியின் விருப்பமான இயற்கை வாழிடம் 300 முதல் 1,925 மீட்டர் உயரத்தில் உள்ள காடு ஆகும்.[3][4]
ஓ. காம்ப்டோனி வியக்கத்தக்க வண்ணத்தினைக் கொண்டுள்ளது. முதுகுபுறமாக, இது மஞ்சள், சிவப்பு கலந்த பழுப்பு, நீலம் கலந்த சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் கோடுகளுடையது. வயிற்றுப் புறத்தில் கருப்பு பட்டைகளுடன் சிவப்பு நிறமாகவும், வால் சிவப்பு நிறத்திலும் இருக்கும். விவரிக்கப்பட்ட ஒற்றை மாதிரியின் நீளம் 54 செ. மீ. ஆகும், இதில் வால் நீளம் 7 செ. மீ. அடங்கும்.[3]
ஓ. காம்ப்டோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]