கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80 இக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]
- ஆரம்பகால வாழ்க்கை
- கே.சங்கர் கேரளா மாநிலம் மலபாரில் கண்ணன்-ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். பின்பு அவர் தந்தை தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடியேறினார்கள். அங்கு சங்கர் படித்து கொண்டு இருக்கும்போதே அவர் தந்தை கண்ணன் அங்குள்ள ஆங்கிலேயர்கள் கட்டுபாட்டில் நடத்தி வந்த பஞ்சாலையில் வேலை செய்துவந்தார்.
- அவர் தந்தை கண்ணன் தினமும் வேலை முடித்து வீடு திரும்பிய பின் அவர் தந்தைக்கு சங்கர் உடல் பிடித்துவிடுவது. போன்ற வேலைகளால் சங்கரின் தாயார் ருக்மணி சிறுவயதிலே அவரது படிப்பை நிறுத்திவிட்டார்.
- அதனால் அவர் தாயார் மிகவும் கண்டிப்புடன் அவரை வளர்த்து வந்ததாள் சங்கர் வேலை பார்க்கும் போது ஆங்கிலேயர் ஆட்சியிலே திரையிட பட்ட ஆங்கில திரைப்படங்களை ஆர்வமாக பார்த்து ரசிக்க தொடங்கிய நாள் முதலே சிறுவன் கே. சங்கர் தான் ஒரு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும். ஆசை உருவானது.
- இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ. வி. எம் படத்தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும்.கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர் எம். ஜி. ஆர், சிவாஜி படங்களை இயக்கினார் இவர் எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, அன்புக்கரங்கள் என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.[2]
- மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்துவாங்கிவிடுவார்.
- மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார். இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.
இது முழுமையான பட்டியல் அல்ல.
தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.[1]