கொசப்பேட்டை
Kosapet குயப்பேட்டை | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′32″N 80°15′18″E / 13.0922°N 80.2551°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 54 m (177 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600012 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, சென்னை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி, சூளை மற்றும் டவுட்டன் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | திருமதி. மு. அருணா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | வட சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | கலாநிதி வீராசாமி |
சட்டமன்ற உறுப்பினர் | தாயகம் கவி |
குயப்பேட்டை என்கிற கொசப்பேட்டை என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 54 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொசப்பேட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°05′32″N 80°15′18″E / 13.0922°N 80.2551°E ஆகும். புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, சென்னை, ஜமாலியா, பெரம்பூர், வியாசர்பாடி, சூளை மற்றும் டவுட்டன் ஆகியவை கொசப்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை வடிவமைப்பு செய்யும் தொழிலே பிரதானமாகக் கொண்ட கொசப்பேட்டை பகுதியில், ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான விநாயகர் சிலைகளை, சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், அண்டைய மாவட்டங்களிலிருந்தும் பல வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.[2][3][4][5][6][7]
கொசப்பேட்டை அனுமந்தராய கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற வினைதீர்த்த விநாயகர் கோயில்,[8] கொசப்பேட்டை கந்தசுவாமி கோயில்[9] ஆகியவை இங்குள்ள சில முக்கியமான கோயில்களாகும்.