கோடாட் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 16°59′52″N 79°57′55″E / 16.99778°N 79.96528°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
மாவட்டம் | சூரியபேட்டை |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | கோடாட் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 31.19 km2 (12.04 sq mi) |
ஏற்றம் | 114 m (374 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 65,234 |
• அடர்த்தி | 2,100/km2 (5,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 508 206 |
தொலைபேசி குறியீடு எண் | +91–8683 |
வாகனப் பதிவு | TS-29 |
எழுத்தறிவு | 74.12% |
கோடாட் (Kodad), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் மண்டலின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[3][4] இது மாவட்டத் தலைமையிடமான சூர்யபேட்டைக்கு தென்கிழக்கே 44 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை எண் 65-இல் ஐதராபாத்திற்கும், விஜயவாடாவிற்கும் இடையே உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 15,879 வீடுகள் கொண்ட கோடாட் நகரத்தின் மக்கள் தொகை 64,234 ஆகும். அதில் ஆண்கள் 32,010 மற்றும் 32,224 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,309 மற்றும் 3,583 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.65%, இசுலாமியர் 15.46%, கிறித்தவர்கள் 1.54% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர். [5]
இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த விஷ்ணுபுரம் தொடருந்து நிலையம் ஆகும்.[6]