கோடிலிங்கேசுவரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | கோலார் |
அமைவு: | கம்மசந்திரா |
ஏற்றம்: | 839.39 m (2,754 அடி) |
ஆள்கூறுகள்: | 12°59′42.7″N 78°17′44.9″E / 12.995194°N 78.295806°E[1] |
கோயில் தகவல்கள் |
கோட்டிலிங்கேசுவரர் கோவில் ( Kotilingeshwara Temple ) இந்தியாவின் கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள கம்மசந்திரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். கோயிலின் முதன்மைக் கடவுளாக சிவன் வணங்கப்படுகிறார். இக்கோவிலில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது.[1]
புராணத்தின் படி, முதலில் நாத்திகராக இருந்து சிவ பக்தராக மாறிய ஒருவரால் இலிங்கங்கள் கோவிலில் வைக்கப்பட்டதாக ஒரு கதை கூறப்படுகிறது.[2] இக்கோவிலின் கதை 2001 இல் வெளியான ஸ்ரீ மஞ்சுநாதா என்ற பெயரில் ஒரு துறவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
கோயிலின் முக்கிய ஈர்ப்பு 108 அடி (33 மீ) உயரமும், 35 அடி (11 மீ) உயரமும் கொண்ட ஒரு பெரிய நந்தி சிலையாகும். இது 15 ஏக்கர் (61,000 மீ2) பரப்பளவில் லட்சக்கணக்கான சிறிய லிங்கங்களால் சூழப்பட்டுள்ளது. நந்தி சிலை 60 அடி (18 மீ) நீளம், 40 அடி (12 மீ) அகலம் மற்றும் 4 அடி (1.2 மீ) உயரம் கொண்ட மேடையில் நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு தெய்வங்களுக்கு வளாகத்தில் பதினொரு சிறிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இலிங்கத்திற்கு அருகிலேயே தண்ணீர் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திருமுழுக்கு செய்ய அதனைப் பயன்படுத்துகின்றனர். சிலைகள் 1 அடி (0.30 மீ) மற்றும் 3 அடி (0.91 மீ) உயரத்தில் வேறுபடுகின்றன. கோவிலை ஒட்டி விருந்தினர் இல்லம், திருமண மண்டபம், தியான மண்டபம் மற்றும் கண்காட்சி மையம் உள்ளது [3] இக்கோயிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் உயரமான இலிங்கம் ஒன்று உள்ளது. இங்குள்ள இலிங்கங்களின் எண்ணிக்கை ~6.5 லட்சம் (அதாவது 1 m² நிலத்தில் 10 லிங்கங்கள், 61,000 m² நிலத்தில் தோராயமாக 6.1 லட்சம் லிங்கங்கள் இருக்க முடியும்) ஒரு கோடி (பத்து மில்லியன்) அல்ல.
உலகின் மிக உயரமான சிவலிங்கம் கொண்ட இக்கோவிலில் 90+ லட்சம் எண்ணிக்கையில் வெவ்வேறு அளவுகளில் உள்ள சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளது. 33 மீ உயரமுள்ள சிவலிங்கம் மற்றும் 11 மீற்றர் உயர நந்தி, காளை ஆகியவை கோயிலின் முக்கிய ஈர்ப்புகளாகும். பல்வேறு அளவுகளில் சிவலிங்கங்களை நன்கொடையாகக் கொடுப்பதற்காக கோயில் திறக்கப்பட்டுள்ளது, அதில் நன்கொடையாளரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு சாம்பசிவ மூர்த்தி என்பவரால் கோயில் கட்டப்பட்டது. கோலார் மாவட்டத்திலுள்ள கம்மசநத்ரா என்ற ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்லும் பாதை எளிதில் அணுகக்கூடியது. தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தாலும், மகா சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகை மற்றும் பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நிகழ்கிறது. விஷ்ணு, பிரம்மா, மகேசுவரன், அன்னபூரணி, கருமாரி அம்மன், வெங்கடரமணி சுவாமி, பாண்டுரங்க சுவாமி, இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் , பஞ்சமுக கணபதி, அனுமன் போன்ற பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 11 சிறிய கோவில்களும் உள்ளன. இதே வளாகத்தில் உள்ள கன்னிகா பரமேசுவரி கோவிலும் அமையப்பெற்றுள்ளது.
கோவில் பொதுவாக பெரும்பாலான நாட்களில் காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு மூடப்படும் [4]